தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

2 hours ago
ARTICLE AD BOX
முடிவெடுக்க 24 மணிநேரம் கெடு விதிப்பதாக SC உத்தரவு வழங்கியுள்ளது

தமிழக அரசுடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் கருத்து

எழுதியவர் Venkatalakshmi V
Feb 04, 2025
07:21 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு தடையாக உள்ள கவர்னரின் நடவடிக்கைகளை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில், நீதிமன்றம், அரசியலமைப்பின்படி, தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க 24 மணிநேரம் கெடு விதிப்பதாக கவர்னருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.

கவர்னரின் செயல்பாடுகள், குறிப்பாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் அவற்றை "திருப்பி அனுப்பி" பதிலளிப்பது, தமிழக அரசின் நிர்வாகத்திற்கு முக்கட்டை ஏற்படுத்துவதாக மாநில அரசு குறிப்பிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம், "கவர்னர் நியமனத்தில் எதிர்பார்த்தவாறு செயல்படாமல், சட்டசபையில் திருப்பி அனுப்பிய மசோதாக்களுக்கு ஏன் பதில் அளிக்கவில்லை?" என்ற கேள்வி எழுப்பியுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

#BREAKING | 24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..!#SunNews | #RNRavi | #SupremeCourt | #TamilNadu pic.twitter.com/DBXakV0EOc

— Sun News (@sunnewstamil) February 4, 2025

வழக்கு

12 மசோதாக்கள், ஜனாதிபதிக்கும் 2 மசோதாக்கள்

இந்த வழக்கில், 2020 முதல் 2023 வரை 12 மசோதாக்கள் அனுப்பப்பட்டதாகவும், அதில் 2 மசோதாக்கள் மட்டும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டதாகவும் தமிழக அரசு கூறியது.

மேலும், "தமிழக அரசு அனுப்பிய மசோதாக்களில் எதுவும் நிலுவையில் இல்லை" என்று மத்திய அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.

இதனையடுத்து உச்ச நீதிமன்றம், "தமிழக அரசை தேநீர் விருந்துக்கு அழைத்து கவர்னர் பேசலாம். எதன் அடிப்படையில் கவர்னர் எப்படி முடிவு எடுக்கிறார் எனக்கூற வேண்டும். 24மணி நேரத்தில் தமிழக அரசுடன் பேசி முடிவெடுக்கவேண்டும்" எனக் கூறியது.

நீண்ட விசாரணைக்கு பிறகு, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறும் என்று வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

Read Entire Article