தனியார் பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்திய மாணவர் கைது!

1 day ago
ARTICLE AD BOX

உ.பி.யில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்திய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் ஐஐஎம்டி தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் காலித் பிரதான்.

இவர் ஹோலி பண்டிகையின்போது பல்கலை வளாகத்தில் சுமார் 50 மாணவர்கள் திறந்தவெளியில் தொழுகை நடத்தும் காணொளியைப் பகிர்ந்திருந்தார்.

காணொளி பரவியதைத் தொடர்ந்து, பல்கலை வளாகத்தில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இதையும் படிக்க | முஸ்லிம்களுக்கு கல்வி மிகவும் தேவைப்படுகிறது: நிதின் கட்கரி

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிர்வாகத்தால் அந்த காணொளியை எடுத்த மாணவர் பிரதான் இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், 3 பாதுகாவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

பல்கலை வளாகத்தில் மாணவர்கள் அனுமதியின்றி தொழுகை நடத்திய காணொளி சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து மாணவர் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Read Entire Article