தனிமை பயங்கரமானது - நடிகை சமந்தா

4 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து மணந்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்று குணமடைந்து, தற்போது மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். வருண் தவானுடன், சமந்தா நடித்த 'ஹனி பன்னி' வெப் தொடருக்கு விருது கிடைத்துள்ளது.

சமூக வலைதளத்தில் பிசியாக இயங்கி வரும் சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் மூன்று நாட்கள் தொலைபேசியை பயன்படுத்தாமல் அதை விட்டு விலகி இருந்தேன். மூன்று நாட்களும் மவுனமாக இருந்தேன். தொலைபேசியை தொடவே இல்லை. யாருடனும் தொடர்பு கொள்ளவில்லை. என்னோடு நான் மட்டுமே இருந்தேன்.

நம்மோடு நாம் தனியாக இருப்பது கஷ்டமானது. பயங்கரமானது. ஆனால் இப்படி மவுனமாக இருப்பதை நான் விரும்புகிறேன். பல மில்லியன் தடவைகள் இப்படி தனியாக இருக்கும்படி சொன்னாலும் இருப்பேன். நீங்களும் இப்படி இருக்க முயற்சி செய்யுங்கள்" என்று கூறியுள்ளார். சமந்தாவின் இந்த பதிவு வைரலாகிறது.

Read Entire Article