ARTICLE AD BOX
தனிநபர்கள் Vs கார்ப்பரேட் : யாருக்கு அதிக வரிச்சலுகை வழங்கியது அரசு?
டெல்லி: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக வரிச்சலுகைகளை வழங்குகிறது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டுகின்றன.
மத்திய அரசு மிடில் கிளாஸ் மக்களின் நுகர்வை ஊக்குவிக்கும் வகையிலான எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை, வருமான வரி செலுத்தும் தனி நபர்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கக்கூடிய வரி சலுகைகளை வெளியிடுவதில்லை என குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன. ஆனால் மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு தரவு இதற்கு மாறாக இருக்கிறது.

எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தனி நபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வரிசலுகையின் மதிப்பு 8.7 லட்சம் கோடி ரூபாய் என தெரிவிக்கிறது. இதுவே கடந்த 5 ஆண்டு காலத்தில் மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்த வரிச்சலுகையின் மொத்த மதிப்பு 4.5 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
இந்தியாவில் அரசு வருமான வரி செலுத்தும் தனி நபர்கள் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினருக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் என பல்வேறு வரி சலுகைகளை வழங்குகிறது. இதில் அதிகம் பலனடைந்திருப்பது தனிநபர்கள் தான் என்பதை இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
மத்திய அரசு வழங்கிய வரிச்சலுகைகள்:
2019 - 2020:
தனி நபர்கள் -ரூ. 1.55 லட்சம் கோடி
கார்ப்பரேட் - ரூ.94,110 கோடி
2020 - 2021:
தனி நபர்கள் - ரூ. 1.28 லட்சம் கோடி
கார்ப்பரேட் - ரூ. 75,000 கோடி
2021 - 2022:
தனி நபர்கள் - ரூ. 1.68 லட்சம் கோடி
கார்ப்பரேட் - ரூ. 96,000 கோடி
2022- 2023:
தனி நபர்கள் - ரூ. 1.96 லட்சம் கோடி
கார்ப்பரேட் - ரூ. 88,000 கோடி
2023- 2024:
தனி நபர்கள் - ரூ.22.2 லட்சம் கோடி
கார்ப்பரேட் -ரூ. 99,000 கோடி
இதன் மூலம் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களை விட தனிநபர்களுக்கு தான் அதிக வரிச்சலுகை வழங்கி இருப்பது இழந்துள்ளது. அண்மையில் கூட மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய வரி கணக்கு நடைமுறையில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்பவர்கள் ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் வரை எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார்.
இதன் மூலம் தனிநபர்கள் அதிக அளவில் வரி சேமித்து அவர்கள் செலவு செய்யும் போக்கு அதிகரிக்கும் இதனால் சந்தையில் பணப்புழக்கமும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. பட்ஜெட்டில் வெளியிட்ட இந்த அறிவிப்பினால் மத்திய அரசு நேரடி வரிகளில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாயை இழக்கும்.