தடம்புரண்ட ரயில் பெட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!

2 hours ago
ARTICLE AD BOX

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சதாரா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து விலகியது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் ரயில் பெட்டிகளை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பல மணி நேரம் ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை.

Read Entire Article