ARTICLE AD BOX
உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான ‘டெஸ்லா’ கார் தொழிற்சாலை வருகிற ஏப்ரலில் மும்பையில் முதல் விற்பனை மையம் தொடங்கப்படுகிறது; மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2 ஆவது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நெருக்கமான பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் முதல் ஷோ ரூம், மும்பையில் வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இறக்குமதி வரி 20 சதவிகிதம் குறைக்கப்பட்டதையடுத்து டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்கிறது. இதற்கென மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வணிக வளாகத்தின் தரை தளத்தில் 4,000 சதுர அடி கொண்ட இடத்தை டெஸ்லா நிறுவனம் வாடகைக்கு பெற்றுள்ளதாகவும், இந்த ஷோரூமுக்கு மாத வாடகையாக சுமார் 35 லட்சம் ரூபாய் கொடுக்கவுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பைக்கு அடுத்தபடியாக டெல்லியின் ஏரோசிட்டி வளாகத்தில் தனது 2 ஆவது ஷோரூமை திறக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது. மும்பையில் தனது முதல் ஷோரூமை டெஸ்லா திறப்பது உறுதியாகி உள்ள நிலையில், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் டெஸ்லா தனது மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.