ARTICLE AD BOX
டெஸ்ட் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.
மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டெஸ்ட். ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.
கிரிக்கெட்டை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் கிரிக்கெட் வீரராகவும் மாதவன் மற்றும் நயன்தாரா பிரதான பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மறைந்த நடிகர் ரகுவரன் ஆவணப்பட போஸ்டர்!
பாடகி சக்தி ஸ்ரீ கோபாலன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
இந்த நிலையில், சக்தி ஸ்ரீ கோபாலன் பாடிய ‘ஹோப்’ என்கிற பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். இப்படம் வருகிற ஏப். 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.