டெல்லி முதல்வராகும் ரேகா குப்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

4 days ago
ARTICLE AD BOX

Delhi CM Rekha Gupta Net Worth: 2025 டெல்லி தேர்தலில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதன்கிழமை டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குடும்பப் பின்னணி ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Delhi CM Rekha Gupta Networth

2025 டெல்லி தேர்தலில் முதல் முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா புதன்கிழமை டெல்லி முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். கவுன்சிலர், துணை மேயர் போன்ற பதவிகளில் இருந்து படிப்படியாக வளர்ந்த ரேகா குப்தாவின் 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக அமைக்கும் ஆட்சிக்கு தலைமை தாங்க இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு, கல்வித் தகுதி, குடும்பப் பின்னணி ஆகியவை பற்றித் தெரிந்துகொள்ளலாம்.

Delhi CM Rekha Gupta Education

ரேகா குப்தா தனது ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை டெல்லியில் முடித்தார். 2022ஆம் ஆண்டு மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் எல்எல்பி (சட்டத்தில் இளங்கலை) பட்டம் பெற்றார். காசியாபாத்தில் அமைந்துள்ள ஐஎம்ஐஆர்சி சட்டக் கல்லூரியில் படித்தார்.

Delhi CM Rekha Gupta Networth

ரேகா குப்தாவின் தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு ரூ.5 கோடிக்கு மேல் (ரூ.5,31,34,981) சொத்து உள்ளது. 2023-2024 ஆம் ஆண்டில் அவரது கணவருடன் சேர்ந்து அவரது மொத்த வருமானம் ரூ.1,21,05,810 அல்லது ரூ.1 கோடிக்கு மேல். அதே ஆண்டில் அவரது வருமானம் ரூ.6,92,050 ஆகும்.

டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேகா குப்தா ஒரு தொழில்முறை நிபுணர். பிக்சட் டெபாசிட் உள்பட வங்கி சேமிப்புகளிலிருந்து வட்டி வருமானம் பெறுவதோடு, பங்கு வர்த்தகம் மூலம் வருமானமும் பெற்றுள்ளார் என பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Delhi CM Rekha Gupta Networth

தனது குழந்தைப் பருவத்தில், பள்ளியில் படிக்கும் போதே, ரேகா ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபியில் இணைந்தார். பின்னர், டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில், தௌலத் ராம் கல்லூரியில் செயலாளர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 1995-96ஆம் ஆண்டில், டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது கல்வியை முடித்த பிறகு, ரேகா குப்தா 2003-04ஆம் ஆண்டில் பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் டெல்லி பிரிவில் சேர்ந்து, 2004 முதல் 2006 வரை அதன் செயலாளராகப் பணியாற்றினார்.

Delhi CM Rekha Gupta Political Journey

2007 ஆம் ஆண்டில், அவர் வடக்கு பிதாம்புராவில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2007 முதல் 2009 வரை டெல்லி மாநகராட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டில், டெல்லி பாஜக மகிளா மோர்ச்சாவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டில், கட்சியின் தேசிய செயற்குழுவில் உறுப்பினரானார். 2012ஆம் ஆண்டில் வடக்கு பிதாம்புராவின் வார்டு-54 இலிருந்து கவுன்சிலராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Read Entire Article