“விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..,” விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!

2 hours ago
ARTICLE AD BOX
TVK Leader Vijay - NTK Leader Seeman

சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை தினமும் பல்வேறு செய்திகள் வாயிலாக வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜயின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகும், பெரியார் பற்றிய கடும் விமர்சனங்களை சீமான் முன்வைத்து பேச துவங்கியதில் இருந்தும் இந்த விலகல்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆரம்பித்து மாநில பொறுப்புகளில் இருப்பவர்கள் வரையில் பலரும் விலகி மாற்றுக்கட்சிக்கு செல்லும் நிலை தொடர்கிறது. சமீபத்தில் கூட நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பவரும், நாம் தமிழர் கட்சியின் நட்சத்திர முகங்களில் ஒன்றாக விளங்கும் காளியம்மாள் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார். அதற்கான அழைப்பிதழில் கூட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் என பெயரிடாமல் சமூக செயற்பாட்டாளர் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்தும் பல்வேறு கேள்விகள் சீமான் முன் எழுந்த போது, யார் விலகினாலும் தவறில்லை. அது அவர்கள் விருப்பம் என மழுப்பலாக பதில் கூறினார். மேலும் இது எங்கள் கட்சி களை உதிர் காலம் எனவும் விமர்சனம் செய்தார் சீமான்.

இன்று சென்னையில் கட்சி நிகழ்வில் கலந்து கொண்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவரிடம் காளியம்மாள் பெயர் சமூக செயற்பாட்டாளர் என்று இருந்தது குறித்தும், சமீப காலங்களில், அதாவது விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து நாம் தமிழர் கட்சியில் விலகும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறதே என்றும், அவர்கள் தவெக அல்லது திமுகவில் சேர்கின்றனர் என்பது குறித்தும் செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சீமான்,  ” நம்ம கட்சியில் வேண்டாம் என சில பேரை நாங்கள் நகர்த்துகிறோம். அதுக்கப்புறம் அவங்க எந்த கட்சிக்கு போறாங்கனு நமக்கு தெரியாது. அவர்கள் கட்சிக்கு வேண்டும் என்றால் விளக்கம் கேட்கலாம். வேண்டாம் என்றால் விலக்கி தான் வைக்க வேண்டும். கட்சியை நடத்தும் போது யார் யார் தேவை, யார் தேவையில்லை, யார் நீண்ட தூரம் பயணித்து கட்சியை கொண்டு போவதற்கு சரியான ஆள் என கட்சி முடிவு எடுக்கும். இது நாட்டிற்கு பெரிய பிரச்சனை இல்லை. விலகி சென்றவர்கள் எங்கிருந்தாலும் வாழுங்கள் என்று தான் கூற வேண்டும். ” என பதில் அளித்தார்.

அடுத்ததாக சாதிய பாகுபாடு நாம் தமிழர் கட்சியில் பார்க்கப்படுவதாக ஒரு மாவட்ட நிர்வாகி குற்றம்சாட்டியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு ஆவேசமான சீமான்,  சாதி பார்த்து தான் சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பொது தொகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்த ஆதிகுடிகளை வேட்பாளர்களாக நிற்கவைத்தேனா? வெளியே போகும் போது இக்கட்சி நல்ல கட்சி என்றா கூறமுடியும், அப்புறம் ஏன் வெளியேவந்தீங்கன்னு கேப்பீங்க.., அதுக்காக என் மீதோ, கட்சி மீதோ சில அவதூறுகளை பரப்புகிறார்கள்.” என சீமான் கூறினார்.

Read Entire Article