டெல்லி முதலமைச்சர் ரேகாவின் ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சமாம்: சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

4 days ago
ARTICLE AD BOX

வழக்கறிஞர் தொழில் மூலம், ஆண்டு வருமானம் ரூ.6.9 லட்சம் எனவும் சொத்து மதிப்பு ரூ.5 கோடி எனவும் டெல்லி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜகவை சேர்ந்த ரேகா குப்தா அறிவித்துள்ளார்.

தேசிய தலைநகரில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் ரேகா குப்தா டெல்லியின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஷாலிமார் பாக் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் மொத்த சொத்து மதிப்பு ரூ.5.3 கோடி என்றும் கடன்கள் ரூ.1.2 கோடி என்றும், தனது வருமான ஆதாரம் வழக்கறிஞர் தொழிலில் இருந்து வருவதாகvஉம் சட்டமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர அவரிடம் ரூ.1,48,000 மதிப்புள்ள ரொக்கமும், வங்கிக் கணக்கில் ரூ.22,42,242 மதிப்புள்ள பணமும் உள்ளது.

அவரது ஆண்டு வருமானம் சமீபத்திய ஆண்டுகளில் ஏற்ற இறக்கங்களைக் காட்டுகிறது. 2023-24 ஆம் ஆண்டில், அவர் ரூ.6.92 லட்சம் வருமானம் அறிவித்தார், இது 2023 இல் ரூ.4.87 லட்சமாக இருந்தது. 2021-22 ஆம் ஆண்டில் அவரது வருமானம் ரூ.6.51 லட்சமாகவும், 2020-21 இல் ரூ.6.07 லட்சமாகவும், 2019-20 இல் ரூ.5.89 லட்சமாகவும் இருந்தது.

ரேகா மற்றும் அவரது கணவர் மனிஷ் குப்தா ரூ.53,68,323 மதிப்புள்ள ஆயுள் காப்பீட்டுக் கொள்கையையும், அவரது கணவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட காரையும் வைத்துள்ளனர். அவருக்கு ரோஹினியில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள வீடு உள்ளது.

ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் தீவிர உறுப்பினரான இவர், மீரட்டில் உள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தில் தனது வழக்கறிஞர் படிப்பை முடித்தார். 1992 ஆம் ஆண்டு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் உறுப்பினராக தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.

பாஜக ஆளும் மாநிலத்தின் ஒரே பெண் முதல்வராகத் திகழும் ரேகா, 1996-97 க்கு இடையில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் தலைவராகவும் பணியாற்றினார். டெல்லியில் பாஜக யுவ மோர்ச்சாவின் செயலாளராகவும் (2003-2004) பணியாற்றினார், பின்னர் தேசிய செயலாளராகவும் (2004-2006) பணியாற்றினார்.

ஷாலிமார் பாக் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தற்போதைய எம்எல்ஏ பந்தனா குமாரியை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் ரேகா குப்தா தோற்கடித்தார். 2013ஆம் ஆண்டு தேர்தலில் ரேகாவின் முயற்சி தோல்வியடைந்தது. மேலும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.

தேர்தல் களத்தில் இறங்குவதற்கு முன்பு, மார்ச் 2010 முதல் பாஜகவின் தேசிய நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் வடக்கு பிதாம்பூரா (வார்டு 54) கவுன்சிலராகவும் பணியாற்றினார்.

Read Entire Article