ARTICLE AD BOX
வாழ்வதற்கு உணவு சாப்பிட்ட காலம் போய் சாப்பிடுவதற்காகவே வாழும் காலம் வந்துவிட்டது. ஆம் உணவு முறையில் பழக்கத்தில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளது. உணவு நோயை குணப்படுத்தும் என்று கூறி தற்போது உணவினால் நோய் வருகிறது என்று கூறுகிறோம்.
தேவையில்லாத நேரங்களில் தேவையில்லாத உணவுகளை சாப்பிடுவதால் பல உடல்நல கோளாறுகளும் நோய்களும் வருவதாக செஃப் வெங்கடேஷ் பட் பிஹைன்வுட்ஸ் யூடியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் இதுகுறித்து பேசிய அவர்,
தினமும் வாழ்க்கையில் சாப்பாட்டு முறையில் ஒருசிலவற்றை பின்பற்றினாலே போதும் வாழ்க்கையில் 30% நோயை தவிர்க்கலாம் என்கிறார். அதற்கு சில வழிமுறைகளையும் கூறியுள்ளார்.
- சாப்பிடும் நேரம் - இரவு 7 முதல் 8 க்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். 8 மணிக்கு மேல் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
- சுடுதண்ணீர் - 300 மி.லி சுடுதண்ணீர் காலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.
- எண்ணெய் - உணவில் எண்ணெய் அளவை குறைக்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்கள் சாப்பிட கூடாது.
- இரவில் அதிக உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
- பிடித்த உணவாக இருந்தாலும் கட்டுப்பாட்டுடன் உணவை சாப்பிட வேண்டும்.
- இரவு குறைவான உணவை சாப்பிட வேண்டும்
- தூங்குவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் சாப்பிட்டு முடித்து இருக்க வேண்டும்.
"Daily காலையில இத சாப்பிட்டா.. 30% வியாதி போய்டும்"
இவற்றை பின்பற்றினால் வாழ்வில் 30% நோயை தவிர்க்கலாம் என்று செஃப் வெங்கடேஷ் பட் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.