ARTICLE AD BOX
நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி டீசர் புரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ’குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், இதில் அஜித் மூன்று வெவ்வேறு தோற்றங்களில் நடித்துள்ளார்.
அஜித்துடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: மாஸ்க் போஸ்டர்கள் வெளியீடு!
தமிழ் புத்தாண்டு வெளியாக ஏப். 10 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இதனால், படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகவுள்ளன. சில நாள்களுக்கு முன் நடிகை த்ரிஷா ‘ரம்யா’ என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக விடியோ வெளியிட்டு அறிவித்தனர்.
இந்த நிலையில், நேற்று (பிப். 25) குட் பேட் அக்லி படத்தின் டீசர் வருகிற பிப். 28 ஆம் தேதி வெளியாகும் என புரோமோ வெளியிட்டு அறிவித்தன.
அந்த புரோமோவில் அஜித் இரு வெவ்வேறு தோற்றங்களில் வருவதும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ரசிகர்களிடம் பெரிதாக வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.