தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

3 hours ago
ARTICLE AD BOX

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட்டின் பெயரை நாளை(பிப்.27) நடைபெறும் கூட்டத்தொடரில் முதல்வர் ரேகா குப்தா முன்மொழிவார் என்று கூறப்படுகிறது.

இந்தப் பதவிக்கு வேறு எந்த போட்டியாளர்களும் போட்டியிடாததால் தில்லி பேரவை அலுவலகம் வழங்கிய அலுவல் பட்டியலின்படி, மோகன் சிங் பிஸ்ட் இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுப்பதற்கு இரண்டு தனித்தனி தீர்மானங்கள் கொண்டு வரப்படும்.

முதல் தீர்மானத்தை முதல்வர் குப்தா முன்மொழிந்து சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வழிமொழிவார், இரண்டாவது தீர்மானத்தை எம்எல்ஏ அனில் குமார் சர்மா முன்மொழிந்து கஜேந்தர் சிங் யாதவ் ஆதரிப்பார்.

ஆறு முறை எம்.எல்.ஏ.வாகவும், மூத்த பாஜக தலைவருமான மோகன் சிங் பிஸ்ட், பிப்ரவரி 5ல் நடைபெற்ற தில்லி தேர்தலில் முஸ்தபாபாத் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் ஆம் ஆத்மி கட்சியின் அடீல் அகமது கானை 17,000-க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article