மஹாசிவராத்திரி: மேஷம் முதல் கடகம் வரை 4 ராசியினர் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்ன?

3 hours ago
ARTICLE AD BOX

மஹாசிவராத்திரி: மேஷம் முதல் கடகம் வரை 4 ராசியினர் செய்ய வேண்டிய வழிபாடுகள் என்ன?

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

மஹா சிவராத்திரி: மஹா சிவராத்திரி பிப்ரவரி 26 ஆம் தேதியான இன்று கொண்டாடப்படவுள்ளது. மாலை முதல் காலை வரை நான்கு கால பூஜைகளுடன் ஒவ்வொரு சிவாலயங்களிலும் மஹா சிவாராத்திரி விழா கொண்டாடப்படும். இந்த நன்னாளில் மேஷம் முதல் கடகம் வரை ஒவ்வொரு ராசியினரும் சிவபெருமானை வழிபடும் முறை குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

மாதம்தோறும் சிவராத்திரி வருகின்றது. ஆனாலும், மாசி மாதம் வரும் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். சிவனடியார்கள் எல்லோரும் சதுர்தசியிலும் விரதம் இருந்து சிவனை வழிபாடுவார்கள். ஆண்டு முழுவதும் வரும் சதுர்தசியில் வழிபடவில்லை என்றாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி அன்று வழிபடுவதால் அனைத்து விதமான பலன்களையும் பெற்று விடலாம் என்பது நம்பிக்கை.

2025 Maha sivarathri Astrology Rasi palan

144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கொண்டாடப்பட்டு வருகிறது. கும்பத்தில் சூரியனும், ரிஷபத்தில் குருவும் இருக்கக்கூடிய காலகட்டத்தில்தான் கும்பமேளாக்கள் நடத்தப்படும். பெரும்பாலும், அனைத்து கிரகங்களும் நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். இதேபோன்ற அமைப்பு 144 ஆண்டுகளுக்கு முன்பாகததான் அமைந்தது. அதனால்தான் இது மகா கும்பமேளா என்று அழைக்கப்படுகிறது.

மகா கும்பமேளாவையொட்டி, மகா சிவராத்திரி நாளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்த நாளில் அனைவரும் கண் விழித்திருந்து சிவபூஜை செய்வது நல்லது. நான்கு கால பூஜைகள் நடைபெறும். அதில் அனைவருமே கலந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு பரிகார வழிபாடுகள், வழிபாட்டு முறைகள், சமர்ப்பணங்கள் உள்ளன. இந்த முறைகளை கடைப்பிடிப்பதால் மக்களுக்கு சிறப்பான பலன்களும் கிடைக்கும்.

மேஷம் - மேஷ ராசியைப் பொருத்தவரையில் 12 இல் ராகுவும், 6 இல் கேதுவும் இருக்கின்றனர். 6 இல் இருக்கும் கேது பலவிதமான தொல்லை, ஆரோக்கிய குறைபாடு, பணப் பிரச்சனை எதிரிகள் பிரச்சனை சந்தித்து கொண்டிருப்பார்கள். இந்த சிவராத்திரி தினத்தில் மேஷ ராசிக்காரர்கள் சிவனை மனமுருகி வழிபடுவதால் அந்தப் பிரச்சனைகள் அனைத்தில் இருந்தும் பூரணமாக விடுதலை அடைவார்கள்.

சிவராத்திரி அன்று சிவாலயங்களுக்கு தானம் கொடுப்பதால் துன்பங்கள் பலவற்றை குறைத்துக் கொள்ள முடியும். மேஷ ராசியினர் அரிசி, துவரம்பருப்பு, நல்லெண்ணெய் போன்றவற்றை தானமாக கொடுக்கலாம். இந்த மூன்று பொருள்களையும் தானமாக கொடுப்பது நல்ல பலன்களைத் தரும்.

ரிஷபம் - ரிஷப ராசிக்காரர்களைப் பொருத்தவரை சுக்கிரனின் ஆதிக்கத்தில் இருக்கக் கூடியவர்களாவர். உங்கள் ராசியில் குரு பகவான் இருப்பதால் வரும் ஆண்டு உங்களுக்கு அபரிமிதமான ஆண்டாக இருக்கும். வெள்ளை நிறப் பொருள்களை தானமாக அளிப்பது உங்களுக்கு நல்லது.

வெள்ளீஸ்வரர் ஆலயங்களில் வழிபடுவது உங்களுக்கு அற்புதமான பலன்களைத் தரும். பன்னீர், பால், இளநீர் போன்றவற்றை தானமாக அளிப்பது எல்லாவிதமான சுபகாரியங்களும் உங்களுக்கு கைகூடி வரும்.

மிதுனம் - மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பகவான்தான் அதிபதியாக உள்ளார். மிதுன ராசிக்காரர்களுக்கு 12 இல் குரு பகவான் உள்ளார். குருவின் அனுகிரகம் உங்களுக்கு மிகவும் தேவை. வரக்கூடிய காலகட்டத்தில் குரு பகவான் உங்களுக்கு ஜென்மத்திலேயே வரப்போகிறார்.

சிவ பக்தி, சிவ வழிபாட்டை அடுத்த ஓராண்டுக்கு நீங்கள் இடைவெளியில்லாமல் செய்வது கட்டாயம். இந்த சிவராத்திரியைப் பொருத்தவரை வில்வம் சிவனுக்கு சமர்ப்பணம் செய்வது நல்லது. சுவாமிக்கு வஸ்திரம் சாற்றுவது, அங்கவஸ்திரம் சாற்றுவது நல்லது. அடியாருக்கு வாங்கிக் கொடுக்க முடிந்தால் இன்னும் சிறப்பு. மிதுன ராசிக்காரர்களுக்கு வரும் காலகட்டம் அற்புதமான பலன்களை அள்ளித் தரும்.

கடகம் - கடக ராசிக்காரர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்க கூடியவர்களாவர். ஜல ராசியான கடக ராசியினர் சிவனுக்கு திரவியங்களால் அபிஷேகம் செய்வது நல்லது. கரும்புச்சாறு அபிஷேகம் செய்து அதனை கண்ணால் காண்பது மிகவும் அற்புதமான பலன்களைத் தரக்கூடும்.

சந்தனம் சமர்பிப்பது, பால், இளநீர், பன்னீர் சமர்ப்பிப்பது, அந்த அபிஷேகங்களை பார்ப்பது உங்களுடைய பாதிப்புகள் அனைத்தும் நீங்கும். குறைகள் அனைத்தும் விலகும். கடக ராசிக்கு சனி பகவான் விலகுகிறார். 60 சதவீதம் நன்மையும், 40 சதவீதம் நிலையற்ற தன்மையும் தரக்கூடும் என்பதால் சந்திர மெளலீஸ்வரராக அருள் பாலிக்கக்கூடிய தலங்களில் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத தரும்.

More From
Prev
Next
English summary
Maha Shivratri will be celebrated on February 26 today. In this astrological article, we will see in detail how each zodiac sign from Aries to Cancer worships Lord Shiva on this day.
Read Entire Article