ARTICLE AD BOX

கொல்கத்தா நகரில் வசித்து வந்த சகோதரர்கள் பிரணயின், பிரசூன் டே. இவர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி கார் விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் தற்கொலை முயற்சி செய்ததாக கூறியுள்ளனர். இதனை அடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் இவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக ஏமாற்றியுள்ளனர். மேலும் இவர்களது தங்கத்ரா பகுதியில் உள்ள சொந்த வீட்டில் இவர்கள் இருவரின் மனைவியும் மற்றும் ஒரு பெண் குழந்தையும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் நடத்திய விசாரணையில் பிரணயின் மனைவி சுதேஷ்னா டே மற்றும் பிரசூன் மனைவி ரோமி டே மற்றும் ரோமி- பிரணயின் மகள் ஆகியோர் கொலை செய்யப்பட்டவர்கள் என தெரியவந்தது. இதனை அடுத்து பிரணயின் மகன் காவல்துறையினரிடம், தனது தாய் மற்றும் அத்தை, சகோதரி ஆகிய மூவரையும் கொலை செய்தது தனது மாமா தான் என கூறியுள்ளார். இதன்பின் சகோதரர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து கொல்கத்தா கமிஷனர் மனோஜ் வர்மா கூறியதாவது, மூவரின் கொலை வழக்கில் எந்த ஒரு வெளித்தொடர்பும் இல்லை. கொலையின் முக்கிய காரணம் அவர்கள் தொழில் தொடர்பான பிரச்சனைதான். சகோதரர்கள் இருவரும் தங்களது மனைவிகள் மற்றும் பெண் குழந்தையை கொலை செய்துள்ளனர். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில், இரண்டு பெண்களின் மணிக்கட்டிலும் வெட்டு காயங்களும், கழுத்தில் ஆழமான கத்தி குத்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் அந்தப் பெண்கள் உயிரோடு இருக்கும்போதே நிகழ்ந்துள்ளது. மேலும் சிறுமி விஷம் கொடுத்ததால் இறந்திருக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் இதனை உறுதிப்படுத்துவதற்கு கூடுதல் நிபுணர்களின் அறிக்கையை பெற வேண்டி உள்ளது என கமிஷனர் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.