டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 20% உயா்வு

3 days ago
ARTICLE AD BOX

கடந்த டிசம்பா் காலாண்டில் இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 20 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.609.35 கோடியாக உள்ளது.

இது, முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 20 சதவீதம் அதிகம். அப்போது நிறுவனம் ரூ.509.61 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தை ஈட்டியிருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் ரூ.11,134.63 கோடியாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.10,113.94 கோடியாக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Entire Article