டிராகன் புயலில் சிக்கி சின்னாபின்னமான தனுஷ் படம்; 3 நாளில் இவ்வளவு தான் வசூலா?

2 hours ago
ARTICLE AD BOX

Nilavuku En Mel Ennadi Kobam Box Office : தனுஷ் இயக்கத்தில் பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்த நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் 3ம் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

Nilavuku En Mel Ennadi Kobam

ராயன் படத்தை இயக்கி வெற்றிகண்ட நடிகர் தனுஷ், அடுத்ததாக இயக்கி உள்ள திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இப்படத்தில் நடிகர் தனுஷின் அக்கா மகன் பவிஷ் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் மேத்யூ தாமஸ், சரத்குமார், சரண்யா பொன்வண்ணன், பிரியா வாரியர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

NEEK Movie

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜென் சி கிட்ஸை கவரும் விதமாக வழக்கமான ஒரு காதல் கதையை படமாக்கி இருக்கும் தனுஷ், இதன் திரைக்கதையில் சொதப்பியதால் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகின்றன. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு போட்டியாக ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் செம மாஸான வரவேற்பை பெற்று வருவதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம் வசூலில் செம அடி வாங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... NEEK Movie | இந்த படம் lovers க்கு மட்டும் இல்லை? வெட்கத்தில் சிரித்த நடிகை அனிகா!

Nilavuku En Mel Ennadi Kobam Box Office

இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்தது. அதனால் டிராகன் படத்துக்கு நிகராக இப்படமும் அதிக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் முதல் நாளில் இருந்தே டிராகன் படம் பிக் அப் ஆனதால் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்திற்கான காட்சிகளும் படிப்படியாக குறைக்கப்பட்டன. இன்று டிராகன் படத்துக்கு 1577 காட்சிகள் திரையிடப்பட உள்ளன. அதே வேளையில் நீக் படத்துக்கு வெறும் 841 காட்சிகள் தான் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.

NEEK Movie Day 3 Box office Collection

காட்சிகள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதை போல் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் வசூலும் படுமோசம் ஆகி உள்ளது. முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் ரூ.3 கோடி வரை வசூலித்திருந்த இப்படம் நேற்று வெறும் ரூ. 1.36 கோடி மட்டுமே வசூலித்து உள்ளதாம். இது சனிக்கிழமை வசூலை விட மிகவும் கம்மி. சனிக்கிழமை இப்படம் ரூ.1.8 கோடி வசூலித்து இருந்தது. இதே நிலை நீடித்தால் நீக் படம் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Nilavuku Enmel Ennadi Kobam| NEEK திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கிய வீடியோ காட்சிகள்!

Read Entire Article