ARTICLE AD BOX
இந்திய சினிமாவில் சிறந்த நடிகைகள் யார் என்கிற பட்டியலை நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

கெளதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் அறிமுகமானவர் சமந்தா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்தார் சமந்தா. டாப் ஹீரோயினாக வலம் வந்தபோதே நடிகர் நாக சைதன்யாவை காதலித்து கரம்பிடித்த சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வந்தார். இதனிடையே கடந்த 2021-ம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவகாரத்து செய்து பிரிந்தார் சமந்தா.

விவாகரத்துக்கு பின் நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் கடந்த ஓராண்டாக சினிமாவை விட்டு விலகிய சமந்தா, அதற்கான சிகிச்சை மேற்கொண்டு வந்தார். படிப்படியாக அதில் இருந்து மீண்டு வந்த சமந்தா, தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடித்த சிட்டாடல் என்கிற வெப் தொடர் வெளியானது. இதையடுத்து பாலிவுட்டில் சில படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் சமந்தா.
இதையும் படியுங்கள்... சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த தமிழ் ஹீரோயின்கள்!

இன்ஸ்டாகிராம் ஆக்டிவ் ஆக இருக்கும் சமந்தா, அதில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடுவார். அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் வெளிப்படையாக பதிலளிப்பார் சமந்தா. அந்த வகையில் அண்மையில் அவர் ரசிகர்களுடன் உரையாடியபோது. ஒருவர், உங்களை பொருத்தவரை யாரெல்லாம் பெஸ்ட் ஹீரோயின்கள் என கேட்டிருந்தார். இதற்கு நடிகை சமந்தா, லேட்டஸ்டாக தனக்கு பிடித்த ஐந்து ஹீரோயின்களின் பெயர்களை வெளியிட்டார்.

அந்த பட்டியலில் உள் ஒழுக்கு படத்தில் நடித்த நடிகை பார்வதி திருவோத்து, சூக்ஷமதர்ஷினி படத்தில் நடித்த நஸ்ரியா, அமரன் படத்தில் நடித்த சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறி இருந்தார். இதுதவிர பாலிவுட்டில் ஜிக்ரா படத்தில் நடித்த நடிகை ஆலியா பட் மற்றும் CTRL பட நடிகை அனன்யா பாண்டே ஆகியோரின் நடிப்பும் தனக்கு மிகவும் பிடித்திருந்ததாக சமந்தா தெரிவித்திருந்தார். அவரின் இந்த பதிலை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... சமந்தாவின் போன் வால்பேப்பரில் இருப்பது யாருடைய பிக்? காலை எழுந்தவுடன் அதை பார்க்கிறாரா?