ARTICLE AD BOX
டிரம்ப் போடும் புது கணக்கு.. டிக்டாக்கை கைப்பற்றப்போவது 'இந்த' நிறுவனம் தானா..?
அமெரிக்காவில் டிக்டாக் தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க அரசு தலைமையில் தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பைடன் அரசு முன்பு வெளியிட்ட தடை உத்தரவு செல்லுபடியாகும் என அந்நாட்டு உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்த பின்பு, டிரம்ப் அரசு 75 நாள் கடைசி கெடு விதித்துள்ளது.
இந்த நிலையில் அடுத்த 75 நாட்களுக்குள் டிக்டாக்-ன் அமெரிக்க நிறுவனத்தில் பெரும் பகுதி பங்குகளை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்பதால் டிரம்ப் பதவியேற்றிய அடுத்த சில மணிநேரத்தில் இருந்து இதற்காந பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.
இந்த செயல்முறை குறித்து ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள் படி, டாக்டாக் செயலிக்கு அமெரிக்க பார்ட்னரை தேடும் திட்டத்தில் அமெரிக்க டெக் நிறுவனமான ஒரேக்கிள், டிக்டாக் அமெரிக்க ஆப்ரேஷன்களை கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகப்படியான பங்குகளை வாங்குவதற்கு டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் டிக்டாக் மற்றும் அதன் சீன தாய் நிறுவனமான பைட்டான்ஸ் இடையேயான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்படாது, புதிய அமைப்பில் சிறிய அளவிலான பங்குகளை வைத்துக்கொண்டு தொடர்ந்து நிர்வாகத்தில் பொறுப்பு வகிக்கும். இருப்பினும், தரவு பாதுகாப்பு மற்றும் மென்பொருள் மேம்படுத்தல் உள்ளிட்ட முக்கிய செயல்பாடுகளுக்கு ஒரேக்கிள் பொறுப்பேற்கும். அமெரிக்க அரசின் முக்கிய அச்சுறுத்தலான தரவு சேகரிப்பு மற்றும் பயன்பாட்டில் இருந்து சீன அரசின் தலையீட்டை ஒரேக்கிள் பங்கீடு மூலம் தடுக்கப்படுவதை உறுதி செய்யும்.
டிக்டாக் செயல்பாட்டுக்கு தேவையான அடிப்படை தொழில்நுட்ப கட்டமைப்பை ஒரேக்கிள் ஏற்கனவே வழங்கி வரும் வேளையில், இந்த பங்கு கைப்பற்றலுக்கும், டிக்டாக் தொடர்ந்து இயங்குவதற்கு தகுதியான நிறுவனமாக உள்ளது. இதேவேளையில் டிரம்ப்-ன் பல்வேறு திட்டத்திற்கு ஒரேக்கிள் லேரி எலிசன் உதவி செய்து வரும் வேளையில், இது ஒரேக்கிள் கைக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் டிரம்ப் தனது ஆதரவாளருக்கு நன்றி கடன் தீர்க்கும் கணக்கும் முடிய உள்ளது.
இந்த பங்கு கைமாறும் ஒப்பந்தத்தில் பைட்டான்ஸின் தற்போதைய அமெரிக்க முதலீட்டாளர்களும் பங்கேற்க உள்ளனர். அதாவது ஜெனரல் அட்லாண்டிக், கோல்பெர்க் கிராவீஸ் ராபர்ட்ஸ் (KKR), சீக்வோயா கேபிடல் மற்றும் சஸ்குவஹன்னா இன்டர்நேஷனல் குரூப் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அனைத்தும் புதிய நிர்வாக அமைப்பில் பங்கு வகிக்க உள்ளன.
டிக்டாக்-ஐ வாங்க பல பெரும் தலைகள் உடன் பிரபல யூடியூபருமான மிஸ்டர் பீஸ்ட்-ம் களத்தில் இறங்கியுள்ளார். வேலை வாய்ப்பு தளமான Employer.com நிறுவனத்தின் சிஇஓ ஜெசி டின்ஸ்லி உடன் யூடியூபர் MrBeast உட்பட இணைத்து டிக்டாக் நிறுவனத்தின் அமெரிக்க பிரிவை வாங்குவதற்கு விருப்ப ஒப்பந்தத்தை சமர்ப்பித்துள்ளார்.
டிக்டாக்-ஐ வாங்குவதில் மிஸ்டர் பீஸ்ட் கூட்டணி முன்னணியில் இருந்தாலும் எலான் மஸ்க், அமேசான் போன்ற அமெரிக்க டெக் துறையின் பெரும் தலைகளும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளன.