ARTICLE AD BOX
அதிரடியாய்.. அசத்தலாய் குறைந்த தங்கம் விலை.. தங்கம் வாங்க சீக்கிரம் கடைக்கு போங்க..!!
ஜனவரி 27 ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்திருக்கிறது. 2025ஆம் ஆண்டின் முதல் மாதமான ஜனவரி தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை கணிசமாக ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. இதற்கிடையில், விலை குறையும் நேரத்தில் தங்கம் வாங்க பெண்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில், நகை பிரியர்களுக்கு இன்று ஹேப்பி நியூஸ் வெளியாகியுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் ஒரு கிராம் 22 கேரட் ரூ.7555-ஐ ஆக இருந்தது. இதற்கிடையில், இன்று அதில் 15 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,540-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,225-க்கும் விற்பனையாகிறது.
நேற்றைய (27/01/2025) தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களில் நேற்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 7,4555-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.60,440-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.74,555-க்கும் விற்பனையானது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 8,241-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 65,928-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 82,410-க்கும் விற்பனையானது. 1 கிராம் 18 கேரட் தங்கம் 6,180-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 62,290-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 61,800-க்கும் விற்பனையானது.
இன்றைய 22 காரட் தங்கம் விலை நிலவரம்: சென்னை, கோவை, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ. 15 குறைந்து ரூ. 7,540-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ. 120 குறைந்து ரூ. 60,320-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.75,400-க்கும் விற்பனையாகிறது.1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.16 குறைந்து ரூ. 8,111-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ. 128 குறைந்து ரூ. 65,800-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.160 குறைந்து ரூ. 81,110-க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 10 குறைந்து 6,130-க்கும், 1 சவரன் 18 கேரட் தங்கம் ரூ. 80 குறைந்து ரூ. 49,040-க்கும், 10 கிராம் 18 கேரட் தங்கம் ரூ. 100 குறைந்து ரூ. 61,300-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை குறைந்துள்ளது. 1 கிராம் வெள்ளி நேற்றைய விலையான ரூ.105 ரூபாயிலிருந்து இன்று ரூ.1 குறைந்து ரூ.104 ஆக விற்பனை ஆகிறது. அதன்படி 1 கிலோ வெள்ளி ரூ.1,04,000-த்திற்கு விற்பனையாகிறது.