டியூன் செம்மயா இருக்கு... ஆனா பாட்டு வரலையே! எம்.எஸ்.வி-யை ஏமாற்றிய வாலி

14 hours ago
ARTICLE AD BOX

எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றிப்படமாக அமைந்த அன்பே வா படம் குறித்து இன்றும் எம்.ஜி.ஆரின் வித்தியாசமான நடிப்பை பார்க்க ப்ரஷாக இருக்கும் இந்த படத்தின் பாடல்களும் பெரிய ஹிட்டாகியுள்ள நிலையில், ஒரு பாடலுக்கு எம்.எஸ்.வி போட்ட டியூனையே மாற்றியுள்ளார் வாலி.

Advertisment

நாடக நடிகராக இருந்து சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தவர் தான் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் சரிவை சந்தித்திருந்தாலும், அதன்பிறகு தனது திறமையின் மூலம் பல வெற்றிப்படங்களை கொடுத்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்தவர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்த ஏ.வி.எம்.நிறுவனம் தயாரிப்பில் கடந்த 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர் ஏ.வி.எம். நிறுவனத்தில் நடித்த ஒரே படமான இந்த படத்தில், எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த நிலையில், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார்.

தான் திரைத்துறையில் அறிமுகமான புதிதில் ஒரு சில படங்களுக்கு அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தாலும், அந்த படங்கள் அவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் எம்.எஸ்.வி தனது கற்பகம் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் மூலம் இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்த நிலையில், வாலிக்கு பல பாடல்கள் எழுதும் வாய்ப்ப கொடுத்த எம்.எஸ்.வி அவர் மீது அபார நம்பிக்கையும் வைத்துள்ளார்.

Advertisment
Advertisements

அந்த நம்பிக்கையில் அன்பே வா படத்தில், ஒரு பாடலுக்கான மெட்டை கொடுத்த எம்.எஸ்.வி, வாலி பாடலை எழுதிவிடுவார் என்ற நம்பிக்கையில், பாடலின் முழு இசையையும் முடித்துள்ளார். ஆனால் கடைசி வரை வாலிக்கு வார்த்தைகள் வரவில்லை. இதனால் அடுத்து என்ன செய்வது என்று யோசித்த எம்.எஸ்.வி – வாலி இருவரும் வேறு மெட்டு போடலாம் என்று முடிவு செய்து தான் ‘அன்பே வா’ என்ற பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த பாடல் இன்றும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வாலி 1000 நிகழ்ச்சியில், எம்.எஸ்.வி கலந்துகொண்ட நிலையில், அப்போது வாலி இந்த தகவலை கூறியுள்ளார்.

Read Entire Article