டி20 கிரிக்கெட்; நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

21 hours ago
ARTICLE AD BOX

கிறைஸ்ட்சர்ச்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுபயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கிறைஸ்ட்சர்ச்சில் இன்று நடக்கிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரு வெற்றி கூட பெறாமல் வெளியேறியதால் கடும் விமர்சனத்தை சந்தித்த பாகிஸ்தான் அணி அதன் பிறகு விளையாடும் முதல் போட்டி இதுவாகும். ஒருநாள் போட்டி கேப்டன் முகமது ரிஸ்வான், முன்னாள் கேப்டன் பாபர் அசாம் ஆகியோர் இந்த தொடருக்கான அணியில் இடம் பெறவில்லை.

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோற்று 2-வது இடம் பெற்ற நியூசிலாந்து அணியில் அங்கம் வகித்த கேப்டன் மிட்செல் சான்ட்னெர், ரச்சின் ரவீந்திரா, கான்வே, கிளென் பிலிப்ஸ் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஐ.பி.எல். போட்டி நெருங்குவதால் இந்த தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மைக்கேல் பிரேஸ்வெல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்க கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி ஆட்டம் காலை 6.45 மணிக்கு தொடங்குகிறது.


Read Entire Article