இந்த அரிசியில் 23 வகை ஆன்டி ஆக்சிடன்ட்; இதய பாதுகாப்புக்கு பெஸ்ட்: சத்குரு

15 hours ago
ARTICLE AD BOX

இந்த அரிசியில் 23 வகையான ஆன்டி ஆக்சிடன்டுகள் உள்ளன. இந்த அரிசி இதய பாதுகாப்புக்கு நல்லது என்று சத்குரு ஜகி வாசுதேவ் பரிந்துரைக்கிறார். அது என்ன அரிசி, அதன் ஆரோக்கிய நன்மைகள் என்ன என்று பார்ப்போம். 

Advertisment

பாரம்பரிய உணவுப் பொருட்கள் மற்றும் அவற்றின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து சத்குரு தமிழ் யூடியூப் சேனலில் ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு ஜகி வாசுதேவ் பேசியுள்ளார். அதில்  இந்த அரிசியில் 23 வகையான ஆன்ட்டி ஆக்சிடன்டுகள் உள்ளன. இந்த அரிசி இதய பாதுகாப்புக்கு நல்லது என்று சத்குரு ஜகி வாசுதேவ் பரிந்துரைக்கிறார். அது என்ன அரிசி என்றால், கருப்பு கவுனி அரிசி ஆகும். 

இந்த அரிசி குறித்து ஜகி வாசுதேவ் கூறுகையில், “இதை கருப்பு கவுனி அரிசி அல்லது கருப்பு கவுனி நெல் என்று சொல்கிறோம். இது ஒரு தனித்துவமான அரிசி வகை, ரொம்ப சத்தான உணவு. ஒரு காலத்தில், இது அரசர்கள் மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

Advertisment
Advertisements

கருப்பு கவுனி அரிசி குறிப்பாக புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்களுக்கு சிறந்த மூலமாக இருந்தது. சில ஆய்வுகள் கருப்பு கவுனி அரிசியில் 23 வகையான ஆண்டி ஆக்சிடன்டுகள் உள்ளன இருக்கிறதாகவும் மற்ற எல்லா அரிசி வகைகளை விடவும் இதில் அதிக ஆண்டி ஆக்சிடன்ட் செயல்பாடுகள் இதில் நடக்கிறதாகவும் காட்டுகிறது. இது இதய நோயில் இருந்து நம்மை பாதுகாக்க உதவுகிறது. இது மனித உடலில் வீக்க எதிர்ப்பு, புற்று நோய் எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த அரிசி மார்பக புற்றுநோய் செல்களுடைய எண்ணிக்கையைக் குறைப்பதையும் தினசரி சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் பரவுவதை மட்டுப்படுத்துவதையும் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது.” என்று சத்குரு ஜகி வாசுதேவ் கூறுகிறார்.

முளைகட்டிய அதே போல வெந்தயத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து சத்குரு ஜகி வாசுதேவ் கூறுகையில், “ முளைகட்டிய வெந்தயம் அருமையான ரத்த சுத்திகரிப்பானாக வேலை செய்கிறது. இதில் நல்ல புரதச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. பாலூட்டும் தாய்மார்களுக்கு ரொம்பவும் நல்லது. தலைமுடி மற்றும் நகங்களுடைய வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது. சிறந்தது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது, ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கிறது. 

முளைகட்டிய வெந்தயத்துடன் முளைகட்டிய பச்சைப்பயறு சேர்த்து சாப்பிடுவது அறிவாற்றலின் ஆரோக்கியத்துக்கு ரொம்ப நல்லது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மெதுவாக உங்கள் நினைவாற்றலை இழப்பதை நீங்கள் உணராமல் போகலாம் என்று சத்குரு ஜகி வாசுதேவ் எச்சரிக்கிறார். அதனால், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் முளைகட்டிய வெந்தயத்துடன் முளைகட்டிய பச்சைப்பயறு சேர்த்து சாப்பிட்டால் நல்ல நினைவாற்றலுடன் இருக்கலாம்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Read Entire Article