குமரி அனந்தனுக்கு உடல்நலக்குறைவு

8 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் வயோதிகம் காரணமாக குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவரது உடல்நிலை மோசம் அடைந்ததால் வேலூரில் உள்ள நருவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென நேற்று முன்தினம் இரவு குமரி அனந்தனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக அவர் வேலூர் நருவி ஆஸ்பத்திரியில் இருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை வானகரத்தில் அமைந்துள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் குழு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Read Entire Article