ARTICLE AD BOX
தமிழ்நாட்டில் இன்று காலை வரை நடந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.மளிகை கடைக்காரர் மீது தாக்குதல்
மனைவியிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக சென்னையில் மளிகை கடை உரிமையாளர் சபரிநாதன் மீது தாக்குதல் நடத்திய பாமக நிர்வாகி சத்தியராஜ் மீது வழக்குப்பதிவு.
2.ஞானசேகரன் மீது மேலும் வழக்குப்பதிவு
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது 7 திருட்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. வில்லா வகை வீடுகளை குறிவைத்து காரில் சென்று கொள்ளை அடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3.செல்வப்பெருந்தகையை மாற்றக் கோரிக்கை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிருப்தி மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தைக்கு எதிராக மாவட்ட தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். பிரியங்கா காந்தியை 25 மாவட்ட தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து மாற்ற கோரிக்கை வைக்க உள்ளனர்.
4.முதலமைச்சர் கேள்வி
பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழும் நாட்டில் ஒரு மொழியை மட்டும் திணிப்பது அரசியல் இல்லையா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி.
5.மத்திய அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்
தமிழ்நாடு 5000 கோடியை இழக்க நேரிடும் என்று கூறிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.
6.பாராளுமன்றத்தில் மநீம குரல்
இந்த ஆண்டு பாராளுமன்றத்திலும், அடுத்த ஆண்டு சட்டமன்றத்திலும் நமது குரல் ஒலிக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேச்சு.
7.பாஜக- இந்து மக்கள் கட்சி இடையே மோதல்
கோவையில் பாஜக - இந்து மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8.குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக் கொடை விழாவினை முன்னிட்டு வரும் மார்ச் 11ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
9.மகாராஷ்டிர அமைச்சர் பாராட்டு
“தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல சிறப்பான மருத்துவம் சார்ந்த திட்டங்களை மகாராஷ்டிராவில் செயல்படுத்த ஆலோசித்துவருகிறோம்” என சென்னையில் மகாராஷ்டிர சுகாதார அமைச்சர் ப்ரகாஷ் அபித்கர் பேட்டி.
10.ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்?
“தமிழ்நாட்டில் ஆங்கிலம் எத்தனை பேருக்கு தெரியும்?. நாமக்கல் அருகே உள்ள கிராமத்தில் போய் ஆங்கிலத்தில் பேசினால், யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அதனால்தான் மும்மொழிக்கொள்கை வேண்டும் என்று சொல்கிறோம்” என சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி.
