ARTICLE AD BOX
நடிகர் உன்னி முகுந்தன் நடித்த கெட் செட் பேபி படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான வன்முறைப்படமான மார்கோ ரூ. 120 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.
மேலும், பான் இந்தியளவில் தனக்கான மார்க்கெட்டையும் உன்னி முகுந்தன் உருவாக்கியுள்ளார்.
இதையும் படிக்க: டிடி நெக்ஸ்ட் லெவல் பாடல் புரோமோ!
இந்த நிலையில், இயக்குநர் வினய் கோவிந்த் இயக்கத்தில் உன்னி முகுந்தன், நிகிலா விமல் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘கெட் செட் பேபி’ (get set baby) திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் செயற்கை கருத்தரித்தல் மருத்துவராக உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். குழந்தைகள் குறித்த நெகிழ்ச்சியான காட்சிகளுடன் படம் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.