ARTICLE AD BOX
டபிள்யூபிஎல் 2025 தொடரின் 11வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மகளிர் - யுபி வாரியர்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் மகளிர் தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. யுபி வாரியர்ஸ் அணி தனது முந்தைய போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியை சூப்பர் ஓவரில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
டபிள்யூபிஎல் வரலாற்றில் நடந்த முதல் சூப்பர் ஓவர் போட்டியில் விளையாடிய யுபி வாரியர்ஸ் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த இரு அணிகளும் தங்களது முந்தைய போட்டியில் ஆர்சிபி மகளிர் அணியை வீழ்த்தி இருக்கிறது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன் மும்பை இந்தியன்ஸ் மகளிர் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. யுபி வாரியர்ஸ் மகளிர் அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இதையடுத்து இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறும்.
மும்பை இந்தியன்ஸ் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் மகளிர் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பவுலிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து முதலில் பேட் செய்த யுபி வாரியர்ஸ் மகளிர் அணி 20 ஓவரில் ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 45, தினேஷ் விருந்தா 33 ரன்கள் எடுத்தனர்.
மும்பை பவுலர்களில் சிறப்பாக பந்துவீசிய நாட் ஸ்கைவர்-பிரண்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷப்னிம் இஸ்மாயில், சான்ஸ்கிரிதி குப்தா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதிரடி தொடக்கம்
யுபி வாரியர்ஸ் ஓபனரான கிரண் நவ்கிரே முதல் ஓவரிலேயே அவுட்டானார். இவருக்கு பின் பேட் செய்ய வந்த தினேஷ் விருந்தா - ஓபனர் கிரேஸ் ஹாரிஸ் இணைந்து அதிரடியில் மிரட்டினர். பவர்ப்ளே ஓவர்களில் 62 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ரன் குவிப்பில் இவர்கள் இரண்டாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். கடந்த போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் தவித்து வந்த கிரேஸ் ஹாரிஸ் தனது பார்மை மீட்டெடுக்கும் விதமாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஹாரிஸ் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். இவர் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்துள்ளார்.
இவருடன் இணைந்து தினேஷ் விருந்தாவும் அதிரடியில் மிரட்டிய நிலையில் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
சரிந்த பேட்டிங் ஆர்டர்
இந்த சீசனில் பேட்டிங்கில் பெரிதாக ஜொலிக்காமல் இருந்து வரும் தீப்தி ஷர்மா, இந்த போட்டியிலும் 4 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை போல் தஹிலா மெக்ராத்தும் ஒரு ரன்னில் வெளியேறினார்.
மிடில் ஆர்டரில் பேட் செய்ய வந்த ஷ்வேதா ஷெராவத் 19 ரன்கள் என சிறிய பங்களிப்பை அளித்தார். கடைசி வரை அவுட்டாகமல் இருந்த உமா சேத்ரி 13 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகமல் இருந்தார். யுபி வாரியர்ஸ் மகளிர் அணியில் நான்கு பேட்டர்களை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் ரன்கள் எடுத்தனர்.
பவுலிங்கில் மிரட்டிய பிரண்ட்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் ஸ்டிரைக் பவுலரான நாட் ஸ்கைவர்-பிரண்ட் மிக துல்லியமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், கட்டுக்கோப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். அதேபோல் ஷப்னிம் இஸ்மாயில் 4 ஓழரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், சான்ஸ்கிரிதி குப்தா 2 ஓவரில் 11 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்