டங்ஸ்டன் திட்டம் ரத்து.. இதை வெற்றியாக பாஜக கொண்டாடுவதுதான் அரசியல்.. கனிமொழி பேட்டி!

4 hours ago
ARTICLE AD BOX

டங்ஸ்டன் திட்டம் ரத்து.. இதை வெற்றியாக பாஜக கொண்டாடுவதுதான் அரசியல்.. கனிமொழி பேட்டி!

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கொண்டு வந்தவர்களே, தற்போது திரும்பப் பெற்றதை வெற்றி என்று கொண்டாடுவது நிச்சயமாக அரசியல் தான் என்று திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார். டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டது போராடிய மக்களுக்கு கிடைத்த நியாயமான வெற்றி என்று கூறிய அவர், மத்திய அரசு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாப்பட்டி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 2,015.51 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான உரிமையை வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் கைப்பற்றியிருந்தது. இந்த அறிவிப்பு கடந்த ஆண்டு நவ.7ல் வெளியாகியது.

tungsten mining project arittapatti tungsten mine auction madurai kanimozhi

இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வந்தனர். விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் குடைவரை கோயில், சமணர் படுகை, சிற்பங்கள், தமிழ்ப் பிராமி எழுத்துகள் என்று வரலாற்று சின்னங்களும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அந்த தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசுகையில், நான் முதலமைச்சர் பதவியில் இருக்கும் வரை இந்த திட்டத்தை கொண்டு வர அனுமதிக்க மாட்டேன் என்று முழங்கினார். இருப்பினும் போராடி வந்த மக்கள், மத்திய அரசு திட்டத்தை ரத்து செய்து அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மதுரையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின் போதும் கூட Save அரிட்டாப்பட்டி என்ற பதாகைகள் ஏந்தினர். இந்த நிலையில் மத்திய அரசு தரப்பில் மேலூரில் அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி மைக் செட் அமைத்து டான்ஸ் ஆடி கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து குறித்து திமுக எம்பி கனிமொழி பேசுகையில், நிச்சயமாக மகிழ்ச்சியாக அறிவிப்பு இது. ஏனென்றால் தமிழ்நாடு மக்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து திட்டத்தை எதிர்த்துள்ளார்கள்.

இது மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த நியாயமான வெற்றி. இது பல்லுயிர் பெருக்க பாரம்பரிய தளம். இங்கு இந்த திட்டத்தை கொண்டு வந்ததே தவறான ஒன்றாகும். அதனை மக்களும், தமிழக அரசும் தொடர்ந்து எதிர்த்துள்ளார்கள். அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக இந்த சுரங்கத் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி வந்துள்ளனர்.

இந்த திட்டத்தை கொண்டு வந்தவர்களே, தற்போது திரும்ப பெற்றதை வெற்றி என்று கொண்டாடுவது நிச்சயம் அரசியல் தான். மொழிக் கொள்கை, சுற்றுச்சூழல், விவசாயிகள் சட்டம் என்று பல்வேறு விவகாரங்களிலும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கொண்டு வரும் திட்டங்களை மக்கள் போராடி தான் திரும்ப பெற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
English summary
BJP Celebrating Tungsten Mining Project cancellation is called Politics says DMK MP Kanimozhi
Read Entire Article