உலக பணக்காரர்கள் மத்தியில் சவுதிக்கு கறார் கூறிய டிரம்ப்! இந்தியாவுக்கு இப்படி ஒரு லாபமா!

3 hours ago
ARTICLE AD BOX

உலக பணக்காரர்கள் மத்தியில் சவுதிக்கு கறார் கூறிய டிரம்ப்! இந்தியாவுக்கு இப்படி ஒரு லாபமா!

Washington
oi-Halley Karthik
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக நாடுகள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சில வகையில் சாதகமாக அமைந்துவிடுகிறது. தற்போது கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று சவுதிக்கு டிரம்ப் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் இந்தியாவில் விரைவில் பெட்ரோல் டீசல் விலை குறைய வாய்ப்பு இருக்கிறது.

பெரும் முதலாளிகள் அங்கம் பெற்றுள்ள 'உலகப் பொருளாதார மன்றத்தின்' (WEF) ஆண்டு கூட்டம் இன்று சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது. இதில் வீடியோ கால் மூலமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று பேசியிருந்தார். தனது உரையில், "அமெரிக்கா வளர்ச்சியை நோக்கி நகர தொடங்கியுள்ளது. உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒன்று நீங்கள் அமெரிக்காவில் உற்பத்தியை தொடங்கலாம். அல்லது, அதிக வரிக்கு உள்ளாவீர்கள்.

trump economy saudi arabia

இப்போது எல்லோருக்கும் இருக்கும் ஓர் உறுத்தல், ரஷ்யா-உக்ரைன் போர்தான். ரஷ்யா இதனை நிறுத்த வேண்டும் எனில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைய வேண்டும். சவுதி அரேபியா மற்றும் பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள், கச்சா எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறேன். அதேபேல அமெரிக்காவில் சவுதி முதலீடுகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தேன். இந்த முதலீட்டு தொகை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகும்(இந்திய மதிப்பில் ரூ.86 லட்சம் கோடி). முதற்கட்டமாக 600 பில்லியன் டாலர் முதலீட்டை எதிர்பார்க்கிறேன்.

கச்சா எண்ணெய் விலையை குறைத்தால் போர் உடனடியாக நின்றுவிடும். இப்போது விலை அதிகமாக இருக்கிறது. இந்த விலையேற்றம் போதும்" என்று கூறியிருக்கிறார்.

விலை குறைப்பு எப்படி போரை நிறுத்தும் என்று கேள்வி எழலாம். காரணம் இல்லாமல் டிரம்ப் இப்படி சொல்லவில்லை. ரஷ்யாவுக்கு இப்போது வரை பண வரவு எண்ணெய் விற்பனையில்தான் கிடைக்கிறது. அரபு நாடுகளை விட குறைந்த விலையில் ரஷ்யா எண்ணெய் விற்பதால், ஓடியாங்க, ஓடியாங்க என்று இந்தியா உட்பட பல ஆசிய நாடுகள் ரஷ்யாவிடம் காசு கொடுத்து எண்ணெய்யை வாங்கி செல்கின்றன. ஆனால் அரபு நாடுகள் எண்ணெய் விலையை ஒரேயடியாக குறைத்துவிட்டால்? இந்தியா வழக்கம் போல அங்குதான் போகும். எனவே ரஷ்யா நஷ்டமாகிவிடும். போருக்கு தேவையான ஆயுதங்களை வாங்க காசு இருக்காது. இப்படி போரை நிறுத்திவிடலாம் என டிரம்ப் கணக்கு போடுகிறார்.

கணக்கெல்லாம் ஓகேதான் ஆனால் அரபு நாடுகள் எண்ணெய் விலையை குறைக்கனுமே! அவங்களுக்கு இருக்கும் ஒரே வருவாய் இதுதான். அப்படி இருக்கும்போது எப்படி குறைப்பார்கள்?

ஆனால் அது மட்டும் நடந்தால் இந்தியாவுக்கு ஜாக்பாட் அடித்தமாதிரிதான். எண்ணெய்யை குறைந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையும் குறைந்துவிடும். நமது பொருளாதாரமும் கொஞ்ச நாட்களுக்கு பிரச்சனை இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும். ஆக யார் யாரோ எடுக்கும் முடிவுகள் எல்லாம் நமக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.

More From
Prev
Next
English summary
Various measures taken by countries around the world are beneficial to India in some ways. In that regard, Trump has instructed Saudi Arabia to reduce the price of crude oil. Due to this, there is a possibility that the price of petrol and diesel will come down soon in India.
Read Entire Article