ARTICLE AD BOX
சின்ன திரை நடிகை மணிமேகலை ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வது குறித்து பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சின்ன திரையில் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சிகளின்றி இருந்த மணிமேகலை, ஜீ தமிழில் தற்போது நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமையன்றும் தான் பணிக்குச் செல்வது குறித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த மணிமேகலை, ஒருகட்டத்துக்கு மேல் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் மாறினார்.
தனது நகைச்சுவை திறனாலும், சூழலைக் கையாளும் விதத்தாலும் நிகழ்ச்சியை முன்னகர்த்திச் சென்றார்.
எனினும் சில முரண்பாடுகள் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு விஜய் தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளர் பிரியங்காவே காரணம் எனவும் கூறப்பட்டது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்களும் இந்த விவகாரத்தில் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து விடியோக்களைப் பதிவிட்டனர். ஆனால், ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாக நின்றனர்.
விஜய் தொலைக்காட்சியின் வேறு எந்த நிகழ்ச்சியிலும் மணிமேகலை பங்கேற்காமல் இருந்துவந்தார். இதனிடையே தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மணிமேகலை மாறியுள்ளார்.
சினேகா, ரம்பா, வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய்யும் மணிமேகலையுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே வேலையே இல்லாத சூழலில் தற்போது ஞாயிற்றுக்கிழமையும் பணிக்குச் செல்வதை குறிப்பிடும் வகையில் படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.
இதில் மணிமேகலையின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டும் வகையில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!