நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு தங்கம் தென்னரசு கேள்வி!!

4 hours ago
ARTICLE AD BOX

தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இன்று மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு என்று முதலமைச்சர் ஸ்டாலினை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள நிதியமைச்சர் தங்கம் தென்னரசு,”2014ஆம் ஆண்டு 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை தற்போது 2025ஆம் ஆண்டு 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறதே, அப்படியென்றால் நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா ?

தமிழ்நாட்டின் மீது உண்மையில் உங்களுக்கு அக்கறை இருந்தால், உங்கள் கட்சியின் அமைச்சர்களிடம் கேட்டு தமிழ்நாட்டிற்கு நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் உள்ளிட்டவற்றிற்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அடைந்திருக்கும் வளர்ச்சியை ஒன்றிய அரசின் பொருளாதார அறிக்கை 2025 பாராட்டியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் அவதூறை மட்டுமே பரப்புவது உங்களது அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறதே தவிர வேறல்ல” என்று எக்ஸ் தளத்தில் அண்ணாமலையின் பதிவுக்கு பதிலளித்துள்ளார்.

செம்ம மிதி pic.twitter.com/DJPWBokBW7

— iyya venkatesan (@IyyaVenkatesan) March 3, 2025


 

Read Entire Article