சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்பாக.. இந்திய அணி உறுப்பினருக்கு நேர்ந்த சோக நிகழ்வு!

4 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு முன்பாக.. இந்திய அணி உறுப்பினருக்கு நேர்ந்த சோக நிகழ்வு!

Cricket
oi-Oneindia Staff
Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக பணியாற்றி வரும் ஆர். தேவ்ராஜ், அவரது தாயார் காலமானதால் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நடுவிலேயே அணியை விட்டு வெளியேறினார். ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் (HCA) செயலராக உள்ள தேவ்ராஜ், தற்போது துபாய் நகரில் இந்திய அணியுடன் இருந்தார். எனினும், அவர் மீண்டும் இந்த தொடரில், மேலாளராக பணியாற்றுவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்தியா செவ்வாய்க்கிழமை முதல் அரையிறுதிப் போட்டியில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான அணிக்கு வெற்றி கிடைத்தால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

ICC Champions Trophy 2025 Cricket Sports 2025

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம், தேவ்ராஜின் தாயார் கமலேஷ்வரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.
"எங்கள் செயலர் தேவ்ராஜ் தாயார் காலமான செய்தி மிகுந்த துயரத்தை தருகிறது. அவர் ஆத்மா சாந்தி அடைய எங்கள் இரங்கல்கள். தேவ்ராஜுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் டிரோபி இறுதி லீக் போட்டியில் இந்தியா 249/9 என சுமாரான ஸ்கோர்தான் பதிவு செய்தது. இதில் ஷ்ரேயாஸ் ஐயர் (79) சிறப்பாக ஆடினார், அதோடு ஹார்திக் பாண்டியாவின் அதிரடி (45, 4 பவுண்டரி, 2 சிக்ஸர்) அணிக்கு பெரிதும் உதவியது.

நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்ரி, 8 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் வெளியேறிய நிலையில், 30/3 என்ற ஸ்கோரில் இருந்து ஷ்ரேயாஸ் ஐயர் - அக்சர் படேல் (42) ஜோடி 98 ரன்கள் கூட்டணி அமைத்து அணியை மீட்டெடுத்தனர். பிறகு நியூசிலாந்து அணியை சிறப்பான சுழல் பந்து வீச்சால் கட்டுப்படுத்தி வென்றது இந்தியா.

இந்த போட்டியின் வெற்றியாளரான இந்தியா அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. நியூசிலாந்து, தென்னாப்பிரிக்காவுடன் விளையாட வேண்டும். இந்தியா அரசியல் காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், துபாயில் செவ்வாய்க்கிழமை முதல் அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது.

More From
Prev
Next
English summary
Indian cricket team manager R Devraj left the squad midway through the Champions Trophy 2025 after his mother passed away. The Hyderabad Cricket Association (HCA) expressed deep condolences for his loss.
Read Entire Article