ARTICLE AD BOX
திருத்தணி: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் திருத்தணி சித்தூர் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருத்தணி ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் இ.என்.கண்டிகை ரவி தலைமையில், கே.ஜி.கண்டிகை, மத்தூர், அகூர், வேலஞ்சேரி, தரணிவராகபுரம், முருக்கம்பட்டு உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றிய நிர்வாகிகள் குப்பன், சீனிவாசன், தாமோதரன், கருணாநிதி, பாலாஜி, பத்மாபுரம் சுரேஷ், ராஜசேகர், மத்தூர் அண்ணாமலை உட்பட பலர் கலந்துகொண்டனர்.
* ஆர்.கே.பேட்டை அருகே, அம்மையார் குப்பத்தில் மாவட்ட பொருளாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.பாண்டுரங்கன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ெதாடர்ந்து, பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. பள்ளிப்பட்டு அருகே, சூராஜுபட்டடை கிராமத்தில் மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஜி.பெருமாள் தலைமையில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
* திருவள்ளூர் வடக்கு மாவட்டம், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில், எல்லாபுரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும், முன்னாள் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏவுமான கே.எஸ்.விஜயகுமார் தலைமையில், பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து, பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத்தலைவர் விஜயன், நிர்வாகிகள் சுந்தர்ராஜன், சேகர், கிளைச் செயலாளர்கள் முத்து பார்த்திபன், மகேஷ், சீனிவாசன், உதயகுமார், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் மஞ்சங்காரணை மற்றும் புன்னனபாக்கம் பகுதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 500 பேருக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.
* திருவள்ளூர் மத்திய மாவட்டம், எல்லாபுரம் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் ஒன்றியச் செயலாளர் மகேந்திரன் தலைமையில் பெரியபாளையம் அடுத்த வடமதுரை அரசு தொடக்கப்பள்ளி அருகே வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், ஏழை எளியவர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, ஒன்றிய செயலாளர் மகேந்திரன் வெங்கல் பகுதியில் கட்சி கொடியை ஏற்றி வைத்து 1500 பேருக்கு பிரியாணி வழங்கினார். இதில், முன்னாள் எல்லாபுரம் ஒன்றியக்குழு பெருந்தலைவர் வடமதுரை ரமேஷ், நிர்வாகிகள் லிங்கன், ராஜீவ் காந்தி, புஷ்பராஜ், நாகராஜ், தமிழ் மன்னன், ஜெகதீசன், விஜி, மணிகண்டன் உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
* திருவள்ளூர் வீரராகவர் கோயில் அருகில் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானம் வழங்கும் விழாவிற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை தாங்கினார். இதில் வழக்கிறிஞர்கள் ராம்குமார், உதயகுமார், நகரச் செயலாளர் கந்தசாமி, நேசன், எழிலரசன், பாலாஜி, செந்தில்குமார், புங்கத்தூர் தேவா, ஜோதி, சுனில் சுந்தரேசன், குமரேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், ஆனந்தி சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடம்பத்தூர் ஒன்றியம் மணவாளநகரில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றியச் செயலாளர் சூரகாபுரம் சுதாகர், மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், வசந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லாயர் அசோசியேசன் தலைவரும் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளருமான ராம்குமார் தலைமையில் உதயகுமார், விஜய் பாபு, சுனில் சுந்தரேசன், கவிதா, சுரேஷ் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு இனிப்பு வழங்கினர்.
திருவள்ளூரில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் நகர்மன்ற தலைவருமான கமாண்டோ ஏ.பாஸ்கரன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பிறகு 300 பேருக்கு காலை சிற்றுண்டி வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ சக்குபாய் தேவராஜன், வெங்கடேசன், நரேஷ்குமார், ராமதாஸ், ஜெய்சந்திரன், வளையாபதி, அண்ணாதுரை, விஜயகுமார், குப்புராஜ், ஷீபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post ஜெயலலிதா 77வது பிறந்த நாள் அதிமுகவினர் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம் appeared first on Dinakaran.