ARTICLE AD BOX
ஜியோ-வுக்கு வேட்டு வைக்க தயாராகும் BSNL.. 4ஜி சேவையில் அதிரடி விரிவாக்கம்..!!
BSNL தனது தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. அதன்படி உள்நாட்டில் 65,000 ரேடியோ தளங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நாட்டின் பல்வேறு பகுதிகளில் 4ஜி சேவையை விரிவுபடுத்த உதவும். இந்த விரிவாக்கத்தின் மூலம் 2100 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 700 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் பயன்படுத்தி கவரேஜை அதிகரித்து வருகிறது. சேவை தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டு BSNL, 5ஜி சேவைகளையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் அலைவரிசைகள் சிறந்த சிக்னலை உறுதி செய்கின்றன, குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் கட்டிடங்களுக்குள் சிறந்த இணைய அனுபவத்தை வழங்குகின்றன. BSNL நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் ஜே. ரவி, கிட்டத்தட்ட 65,000 4ஜி தளங்களை அமைத்துள்ளோம். இது முற்றிலும் உள்நாட்டில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான எங்களது முயற்சியாகும்.
உலகில் ஒரு சில நாடுகள் மட்டுமே இதை முயற்சித்துள்ளன. தன்னம்பிக்கை மற்றும் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து வளர்ந்து வரும் சந்தைக்கு எதிராக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
இந்த 4ஜி அமைப்புகள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும். வெளிநாட்டு தொழில்நுட்பங்களை சார்ந்திருக்காமல் உள்நாட்டு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால் டேட்டா பாதுகாப்பை குறித்து இந்தியா தானே சில கொள்கைகளை நிர்ணயிக்க முடியும். இதன் மூலம் தனி நபர்களின் டேட்டா திருட்டு போதல், கண்காணிப்பு போன்ற பாதுகாப்பு அம்சங்களை திறம்பட கையாள முடியும் என்றும் ரவி கூறியுள்ளார்.
அதோடு குவாலிட்டி ஆப் சர்வீஸ் என்று சொல்லப்படுகிற சேவை தரம் என்பது முக்கியமான ஒன்று. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை பூர்த்தி செய்யும் வகையில் சேவை இருக்க வேண்டும். எனவே தொலை தொடர்பு நிறுவனங்கள் இவை சரியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக இணையத்தின் வேகம், அழைப்பின் தரம் போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும். நாங்களும் வாடிக்கையாளரின் திருப்தியை தான் கருத்தில் கொண்டுள்ளோம். அதோடு ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு குழுக்களையும் அமைத்துள்ளோம். இந்த குழுக்கள் தொடர்ந்து சேவை தரத்தை கண்காணித்து ஏதேனும் பிரச்சனை இருந்தால் அவற்றுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் செயல்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்கள் இணைந்து ரீசார்ஜ் கட்டண உயர்வை அறிவித்தன. அதிலிருந்து பலரும் பிஎஸ்என்எல் ஆப்ரேட்டருக்கு மாறத் தொடங்கினர். ஒருவேளை 4ஜி சேவைகள் பெரும்பாலான பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டால்.. இனி வரும் காலங்களில் முன்னணி டெலிகாம் நிறுவனங்களுடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு போட்டி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.