ARTICLE AD BOX
சாய்பாசா,
ஜார்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டம் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் இருந்து தப்பிக்க நிலத்துக்கு அடியில் சக்தி வாய்ந்த கண்ணி வெடிகளை புதைத்து வைக்கிறார்கள். பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி அதனை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சிங்பும் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு கண்ணிவெடியில் வீரர்கள் சிக்கினர். இதனால் அது வெடித்து சிதறியது. இதில் 3 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக விமானம் மூலம் ராஞ்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.