ARTICLE AD BOX
Turmeric Milk vs Nutmeg Milk : மஞ்சள் பால், ஜாதிக்காய் பால் ஆகியவற்றில் எது சிறந்தது என இந்தப் பதிவில் காணலாம்.

தினமும் பால் அருந்துவது உடலை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும். இதில் எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம் தாது உள்ளது. இந்த பாலில் மஞ்சள் அல்லது ஜாதிக்காய் எதை கலந்து குடிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பதை இங்கு காணலாம்.

மஞ்சள் கலந்த பாலை தங்க அமுதம் அல்லது தங்கப் பால் என அழைக்கிறார்கள். பால் கொதிக்கும்போது அதில் மஞ்சள் கலந்து குடிப்பதையே தங்கப்பால் என்கிறோம். இதை ஆரோக்கிய பானமாக மாற்ற கருப்பு மிளகு, தேன் அல்லது இஞ்சி சாறு சேர்க்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமினை சிறந்த அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கொண்டது. தினமும் உணவில் மஞ்சள் சேர்க்க நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். பாலில் புரதம், எலும்பு ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தும் கால்சியம் மற்றும் வைட்டமின் டி உள்ளன. இதனால் தசைகள் வலுவாகின்றன.
இதையும் படிங்க: Summer Tips : கோடையில் பால் கெட்டுப் போகாமல் தடுக்க நச்சுனு நாலு டிப்ஸ்!!

- மஞ்சள் கலந்த பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மஞ்சளில் உள்ள குர்குமினில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. இதனால் உடலில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்துப் போராட ஆற்றல் கிடைக்கும்.
- கீல்வாதம், இதய நோய்கள், நீரிழிவு ஆகிய நாள்பட்ட நோய்கள், வீக்கத்தைக் குறைக்க மஞ்சள் பால் உதவுகிறது. மஞ்சள் பித்த உற்பத்தியைத் தூண்டுவதால் செரிமானம் மேம்படுகிறது.
- மஞ்சளில் உள்ள குர்குமின் அறிவாற்றலை மேம்படுத்த உதவுகிறது. நரம்பு சிதைவு நோய்கள் வரும் முன் தடுக்க உதவுகிறது.
- மஞ்சளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவும். இதனால் வயதான தோற்றம் மாறி சரும ஆரோக்கியம் மேம்படும். இளமையாக தெரிவீர்கள்

ஜாதிக்காய் பால் தயார் செய்ய பாலை நன்கு காய்ச்சி அதனுடன் ஜாதிக்காய் பொடியை சேர்க்க வேண்டும். இதில் உள்ள மிரிஸ்டிசின், யூஜெனால் போன்றவை மயக்க மருந்து போல செயல்பட்டு தூக்கத்தை தூண்டும். இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. ஜாதிக்காய் பால் குடிப்பதால் தசைகள், நரம்புகளை தளர்த்த தேவையான மெக்னீசியம் கிடைக்கிறது. ஜாதிக்காய் பாலில் கால்சியம், நல்ல கொழுப்புகள் உள்ளன. இவை எலும்புகளை உறுதியாக்கும்.
இதையும் படிங்க: 1 கப் எள்ளுப் பால்; பல நோய்களையும் கட்டுக்குள் வைக்கும்.. ரெசிபி இதோ!!

- ஜாதிக்காய் பால் தூக்கமின்மையை சரி செய்யும். செரோடோனின், டோபமைன் ஆகிய மகிழ்ச்சி ஹார்மோன்கள் அளவை அதிகரித்து நேர்மறை சிந்தனைகளை தரும். இப்படியாக மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ஜாதிக்காய் பால் குடிப்பதால் செரிமானம் மேம்பட்டு வயிறு வீக்கம், வாயு, அஜீரணம் ஆகிய பிரச்சனைகள் நீங்குகின்றன. ஜாதிக்காயில் வாய் துர்நாற்றம் நீக்கும் - பண்புகள் உள்ளன. இவை ஈறு தொற்றுகளைத் தடுக்குகிறது.
- ஜாதிக்காய் பால் குடிப்பதால் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைந்து இரத்த நாளங்களில் உள்ள வீக்கம் குணமாகிறது.

மஞ்சள் பால், ஜாதிக்காய் பால் ஆகிய இரண்டும் நல்லது தான். உங்களுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்க வேண்டும் எனில் மஞ்சள் பால் குடியுங்கள். நல்ல தூக்கம், மன அழுத்தம் நீங்க ஜாதிக்காய் பால் சிறந்த தேர்வு.