ARTICLE AD BOX
பலுசிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் மீதான தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ராணுவமும், அரசும் சிக்கலில் மாட்டியுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தான் ராணுவம் ஒரு வெற்றிகரமான நடவடிக்கையை நடத்தி 36 மணி நேரத்திற்குள் அனைத்து பணயக்கைதிகளையும் மீட்டதாகக் கூறியது.இந்த நடவடிக்கைக்காக அரசு இராணுவத்தையும் பாராட்டியுள்ளது. ஆனால், இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ரயில் கடத்தல் குழுவான பலூச் விடுதலை படை 214 பேர் இறந்துவிட்டதாகக் கூறுகிறது. இந்த விபத்தில் 26 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் அறிக்கையில் பல முரண்பாடுகள் உள்ளன. இதன் காரணமாக உள்நாட்டில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பாகிஸ்தான் ராணுவத்திடம் தற்போது பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை.
ரயில் கடத்தல் விவகாரம் குறித்து, அரசு அறிக்கைகள் விஷயங்களைத் தெளிவுபடுத்தவில்லை என்று இந்தியாவிற்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையர் அப்துல் பாசித் இதுகுறித்து,’இந்த நடவடிக்கையில் 339 பேர் மீட்கப்பட்டதாகவும், 21 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.’ ரயிலில் 440 பேர் இருந்ததாக பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அவர்களே தெரிவித்துள்ளார். இப்போது கேள்வி என்னவென்றால், அந்த 80 பேரும் எங்கே போனார்கள்? எல்லாவற்றிற்கும் மேலாக, ரயிலில் எத்தனை பேர் இருந்தனர்? எத்தனை பேர் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் காப்பாற்றப்பட்டனர்? என்பதை அரசும், இராணுவமும் தெளிவுபடுத்த வேண்டும். 70-80 வித்தியாசம் இருந்தால், பிறகு எப்படி கேள்விகள் எழாமல் இருக்கும்? நாம் தீவிரமாக இருக்க வேண்டும். இது ஒரு தீவிரமான விஷயம்” எனத் தெரிவித்துள்ளார்.
பலூசிஸ்தான் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை பலூச் விடுதலை போராளிகள் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தி பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்ததாக பாகிஸ்தான் ராணுவம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தது. போலான் மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர மலைப்பாதையில் 440க்கும் மேற்பட்ட பயணிகள் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 36 மணி நேரம் நீடித்த போராட்டத்திற்குப் பிறகு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ரயிலையும் பயணிகளையும் மீட்டனர். பாகிஸ்தான் ராணுவம் 33 தாக்குதல் நடத்தியவர்களைக் கொன்றதாகக் கூறுகிறது. அதே நேரத்தில், 21 பயணிகளும் நான்கு பாதுகாப்புப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் இராணுவத்தின் தகவல்களுக்கு மாறாக, ரயிலைக் கடத்திய குழுவான பலூச் விடுதலை படை, 214 பணயக்கைதிகளைக் கொன்றதாகக் கூறியுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பலூச் விடுதலை படை தனது போராளிகள், 214 ராணுவ வீரர்களைக் கொன்றதாகக் கூறியுள்ளது. இது மட்டுமல்லாமல், ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகள் தாங்களாகவே வெளியே வந்ததாகவும், யாரும் தங்களைக் காப்பாற்றவில்லை என்றும் கேமராவில் கூறியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில், பாகிஸ்தான் ராணுவம், அரசின் தகவல்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.