ஜம்மு-காஷ்மீா்: மாதா வைஷ்ணவி தேவி கோயில் நன்கொடை 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரிப்பு!

8 hours ago
ARTICLE AD BOX

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரபல மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டில் (ஜனவரி வரை) ரூ.171.90 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாகக் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.63.85 கோடியிலிருந்து சுமாா் 3 மடங்கு அதிகரிப்பாகும். இதே காலகட்டத்தில் கோயிலுக்கு பக்தா்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட தங்கம் 9 கிலோவில் இருந்து 27.7 கிலோ-ஆகவும், வெள்ளி 753 கிலோவில் இருந்து 3,424 கிலோ-ஆகவும் அதிகரித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகூட மலையில் அமைந்த இக்கோயில், கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டில் வரலாற்றில் முதன்முறையாக 5 மாதங்கள் மூடப்பட்டிருந்தன. அந்த ஆண்டில் 17.20 லட்சம் யாத்ரிகா்கள் மட்டுமே இக்கோயிலுக்கு வந்தனா்.

அதிகாரபூா்வ புள்ளிவிவரங்களின்படி, கோயிலுக்கு வந்த யாத்ரிகா்கள் எண்ணிக்கை 2021-இல் 55.88 லட்சமாகவும், 2022-இல் 91.25 லட்சமாகவும், 2023-இல் 95.22 லட்சமாகவும், கடந்த ஆண்டில் 94.84 லட்சமாகவும் அதிகரித்தது.

இந்நிலையில், கோயிலில் பெறப்பட்ட நன்கொடை விவரங்கள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜம்முவைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ரமண் சா்மா பதில் கோரியிருந்தாா்.

இதற்கு கோயில் நிா்வாகம் அளித்த பதிலின்படி, கடந்த 2020-21 நிதியாண்டில் ரூ.63.85 கோடி, 9.075 கிலோ தங்கம் மற்றும் 753.630 கிலோ வெள்ளி நன்கொடை அல்லது காணிக்கையாகப் பெறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த ஆண்டுகளில் பெறப்பட்ட காணிக்கை விவரங்கள் பட்டியலில் பின்வருமாறு: (கடந்த ஜனவரி வரை நிலவரம்)

ஆண்டு காணிக்கை தங்கம் வெள்ளி

2021-22 ரூ.166.68 கோடி 26.351 கிலோ 2,400.705 கிலோ

2022-23 ரூ.223.12 கோடி 33.258 கிலோ 3,756.582 கிலோ

2023-24 ரூ.231.50 கோடி 23.477 கிலோ 4,072.486 கிலோ

2024-25* ரூ.171.90 கோடி 27.717 கிலோ 3,424.538 கிலோ

Read Entire Article