இனி ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. கண்டிப்பாக பணம் கட்டணும்! ஜியோ அறிவிப்பு

8 hours ago
ARTICLE AD BOX

இனி ஐபிஎல் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. கண்டிப்பாக பணம் கட்டணும்! ஜியோ அறிவிப்பு

Technology
oi-Vigneshkumar
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய விளையாட்டு தொடரான ஐபிஎல் போட்டிகள் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாகப் பார்க்கலாம் என ஜியோ அறிவித்திருந்த நிலையில், அது இப்போது முடிவுக்கு வருகிறது. இனி ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கக் கட்டாயம் கட்டணம் செலுத்த வேண்டும்.

ரிலையன்ஸ் நிறுவனம் இப்போது பெட்ரோலியத்தை தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறது. பல்வேறு துறைகளிலும் தனது மார்கெட்டை விரிவுபடுத்தி வருகிறது. அதன்படி டெலிகாம் மற்றும் ஒடிடி உள்ளிட்ட தளங்களில் இப்போது ஜியோ கவனம் செலுத்தி வருகிறது. அதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

Jio Hotstar to End Free IPL 2025 Streaming New Subscription Plan to be Introduced

ஜியோ ஹாட்ஸ்டார்

இதற்காக ஜியோ நிறுவனம் ஜியோ சினிமாஸ் என்ற ஒடிடி தளத்தை உருவாக்கியது. ஐபிஎல் போட்டிகளில் டிஜிட்டல் உரிமையைப் பெற்ற ஜியோ, அவற்றை இலவசமாக ஒளிபரப்பியது. இதன் மூலம் கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் ஐபிஎல் தொடரை எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். ஆனால், இப்போது அந்த நிலை மாறப் போகிறது.

ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.. ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்! யாருக்கெல்லாம் ப்ரீ தெரியுமா! நோட் பண்ணுங்க
ஒரு ரூபாய் கூட கட்ட வேண்டாம்.. ஜியோ ஹாட்ஸ்டார் இலவசம்! யாருக்கெல்லாம் ப்ரீ தெரியுமா! நோட் பண்ணுங்க

ஐபிஎல் இலவசம் இல்லை

இதன் மூலம் இந்தியாவில் இலவச ஐபிஎல் ஸ்ட்ரீமிங்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.. இந்தியாவில் ஒடிடி தளங்களில் அதிகம் பார்க்கப்பட்ட கன்கெண்டான ஐபிஎல் போட்டிகளை இனி பயனர்கள் பணம் செலுத்தியே பார்க்க வேண்டும். உரியச் சந்தை செலுத்துவோரால் மட்டுமே இனி ஸ்ட்ரீமிங் தளமான ஜியோ ஹாட்ஸ்டாரில் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ ஹாட்ஸ்டார் ஹைபிரிட் மாடலுக்கு மாறியுள்ளது. அதாவது ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள குறிப்பிட்ட வீடியோக்கள் இலவசமாகப் பார்க்கலாம். ஆனால், குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் கட்டணம் செலுத்தியே பார்க்க வேண்டும். மேலும், ஐபிஎல் உள்ளிட்ட முக்கியமான நிகழ்ச்சிகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போல ஹைபிரிட் மாடலுக்கு மாறவுள்ளது.

ஐபிஎல் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும்

கடந்த சில வாரங்களுக்கு முன்பே இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்ற தகவல்கள் வெளியாகின. சாம்பியன்ஸ் டிராபிக்கும் கூட கட்டணம் செலுத்த வேண்டி வரலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், சாம்பியன்ஸ் டிராபி இலவசமாகப் பார்க்கும் வகையிலேயே இருந்தது. இதனால் ஐபிஎல் தொடரும் இலவசமாகத் தொடரும் என மக்கள் நினைத்த நிலையில், இந்த அறிவிப்பு வந்துள்ளது.

வாசல் வரை சூப்பரா இருக்கு.. ஆனா வீட்டிற்குள் வந்தவுடன் 5ஜி இன்டர்நெட் படுமோசமா இருக்கே ஏன்!
வாசல் வரை சூப்பரா இருக்கு.. ஆனா வீட்டிற்குள் வந்தவுடன் 5ஜி இன்டர்நெட் படுமோசமா இருக்கே ஏன்!

ஜியோவின் 3 பிளான்கள்

ஜியோ ஹாட்ஸ்டாரில் மொத்தம் 3 பிளான்கள் இருக்கிறது. முதலில் உள்ள மொபைல் பிளானுக்கு 3 மாதங்களுக்கு ரூ.149 அல்லது ஆண்டுக்கு ரூ.499 செலுத்த வேண்டும். அதிகபட்சம் 720p குவாலிட்டியில் ஒரு நேரத்தில் ஒரு செல்போனில் மட்டும் இதில் வீடியோக்களை பார்க்கலாம். அடுத்து சூப்பர் பிளானில் 3 மாதங்களுக்கு ரூ.299 அல்லது ஆண்டுக்கு என்றால் ரூ.899 செலுத்த வேண்டும். இதில் செல்போன் மட்டுமின்றி டிவிக்களிலும் கூட நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். ஒரு நேரத்தில் இரு கருவிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரை பார்க்க முடியும். மேலும், FullHD (1080p)மற்றும் Dolby Atmos வசதிகளும் கிடைக்கும்.

அடுத்து அதிகபட்ச திட்டம் என்றால் அது பிரீமியம்.. இதில் ஒரே நேரத்தில் 8 கருவிகளை 4K குவாலிட்டியில் பார்க்கலாம். விளையாட்டு மற்றும் லைவ் நிகழ்ச்சிகளைத் தவிர இதர நிகழ்ச்சிகளில் விளம்பரங்கள் வராது. இதில் மாதம் ரூ.299 அல்லது 3 மாதத்திற்கு ரூ.499 அல்லது ஆண்டுக்கு ரூ.1499 சந்தாவாக செலுத்த வேண்டும்.

More From
Prev
Next
Read Entire Article