ARTICLE AD BOX
ஜார்க்கண்டில் வைக்கோல் குவியல் தீப்பிடித்ததில் 4 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்ட், மாநிலம், மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள வீட்டிற்கு அருகிலிருந்த வைக்கோல் குவியல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது.
இந்த தீ விபத்தில் நான்கு சிறுவர்கள் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர்.
சாய்பாசாவில் உள்ள ஜகன்னாத்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கிதிலிபி கிராமத்தில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அவர்கள் கூறினர்.
4 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் மடிக்கணினி ஏன் வழங்கவில்லை? - இபிஎஸ் கேள்வி!
விரிவான விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல் கண்காணிப்பாளர் அசுதோஷ் சேகர் பிடிஐயிடம் தெரிவித்தார்.
தீ விபத்து ஏற்பட்டபோது குழந்தைகள் வைக்கோல் குவியலுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர் என்றும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.