ARTICLE AD BOX
புதுடெல்லி,
ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணிக்கு தலைமையேற்று இருக்கும் சி.ஆர்.பி.எப். வீராங்கனை பூனம் குப்தாவிற்கும், ஜம்மு காஷ்மீரில் பணியில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர் துணை தளபதி அவினாஷ் குமாருக்கும் வரும் 12-ந்தேதி, ஜனாதிபதி மாளிகையில் திருமணம் நடைபெற உள்ளது.
இது ஜனாதிபதி மாளிகையின் வரலாற்றில் நடைபெற உள்ள முதல் திருமண விழாவாகும். பணியில் பூனம் குப்தாவின் அர்ப்பணிப்பு, தொழில் திறன் மற்றும் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் உள்ள கண்டிப்பு போன்றவற்றின் காரணமாக, அவரது திருமணத்தை ஜனாதிபதி மாளிகையில் நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதி அளித்துள்ளார் என கூறப்படுகிறது.
ஜனாதிபதி மாளிகையில் நடைபெற உள்ள இந்த திருமண விழாவில், மணமக்களின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.