ARTICLE AD BOX
சிம்லா,
நடிகைகள் சினிமாவை தாண்டி தாங்கள் சம்பாதித்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்து வருமானம் பார்த்து வருகிறார்கள். ரியல் எஸ்டேட், நகை வியாபாரம், உணவகம், உடற்பயிற்சி கூடங்கள் என்று பல தொழில்களில் முதலீடு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் தமிழில் 'தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் ஓட்டல் தொழிலில் இறங்கி இருக்கிறார். இமய மலைப்பகுதியில் புதிய ஓட்டல் கட்டி உள்ளார்.
இந்த ஓட்டலில் இமாசலபிரதேசத்தின் பாரம்பரிய உணவு வகைகள் நவீன முறையில் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளார். வாடிக்கையாளர்களுக்கு தனது கையால் உணவு பரிமாறும் வீடியோவையும் பகிர்ந்து உள்ளார்.
இமயமலையின் அழகை ரசித்தபடி உணவு உண்ணும் வகையில் இந்த ஓட்டலை அவர் கட்டி இருக்கிறார். எனது சிறுவயது கனவு உயிர் பெறுகிறது என்று கூறியுள்ளார். இந்த ஓட்டலை வருகிற 14-ந்தேதி அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.