இத்தாலியில் இருந்து டெல்லிக்கு 10 கிலோ தங்கக்காசுகள் கடத்தல் - இருவர் கைது

4 hours ago
ARTICLE AD BOX

புதுடெல்லி,

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறையின் வான் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இத்தாலி நாட்டின் மிலன் நகரில் இருந்து வந்த காஷ்மீரைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க 2 பயணிகளை அவர்கள் சோதனை செய்தனர்.

அப்போது பிளாஸ்டிக் உறையில் நன்கு சுற்றி வைக்கப்பட்டிருந்த பொட்டலத்தை பிரித்துப் பார்த்தனர். அதில் தங்கக்காசுகள் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. எடை போட்டு பார்த்தபோது அதில் 10 கிலோ 90 கிராம் தங்க காசுகள் இருந்தன. அதன் மதிப்பு சுமார் ரூ.8 கோடி ஆகும். இந்த கடத்தல் தொடர்பாக 2 பயணிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Read Entire Article