சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்களின் கண்காணிப்பு குழுவில் சிகிச்சை..!

3 days ago
ARTICLE AD BOX

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்களின் கண்காணிப்பு குழுவில் சிகிச்சை..!

sonia gandhi
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரை மருத்துவர்கள் குழு கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
78 வயதாகியுள்ள சோனியா காந்தி, திடீரென உடல் நலக் கோளாறு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தற்போது மருத்துவர்கள் குழு கண்காணித்து, அவருக்கு எந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதை ஆலோசித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், சோனியா காந்தி தற்போது நலமாக இருப்பதாகவும், அவர் இன்றே வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல், காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், அவர் உடல்நலத்துடன் இருப்பதை அறிந்து அவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
அத்துடன், சோனியா காந்திக்காக பல காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனைகளை பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Siva
Read Entire Article