ARTICLE AD BOX
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர். அப்போது, ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ராமேஸ்வரத்திலும் வடமாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் பழனியில் உயிரிழந்த பாஜக ஒன்றிய தலைவருக்கு மாநில தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில்; நாமக்கல் மாவட்டம் மோகனூர் கிழக்கு ஒன்றிய பாஜக தலைவர் செல்வமணி அவர்கள், பழனி கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்தபோது, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்தத் துயரமான நேரத்தில், அவரது குடும்பத்தினருக்கு, பாஜக உறுதுணையாக இருக்கும். நாமக்கல் மாவட்ட பாஜக, செல்வமணி அவர்கள் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
The post சோகம்…! பழனி முருகன் கோவிலில் மூச்சுத் திணறி பாஜக ஒன்றிய தலைவர் மரணம்…! அண்ணாமலை இரங்கல் appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.