இறங்கு முகத்தில் சிறகடிக்க ஆசை: முதலிடத்தில் சின்ன மருமகள்; மற்ற சீரியல்கள் நிலை என்ன?

10 hours ago
ARTICLE AD BOX

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக விஜய் மற்றும் சன்டிவி சீரியல்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் இந்த சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கை பொறுத்தே அந்த சீரியல்களுக்கு கிடைக்கும் வரவேற்பு என்ன என்பது குறித்து வரையெறுக்கப்படுகிறது. இதில் விஜய் டிவி சீரியல்களுக்கு சன்டிவி சீரியல்களுக்கும் தான் டி.ஆர்.பி ரேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

Advertisment

அந்த வகையில் இந்த வார டி.ஆர்.பி ரேட்டிங்கில், சிறகடிக்க ஆசை சீரியல், விஜய் டிவியின் முன்னணி சீரியலாக கடந்த சில மாதங்களாக இருந்து வந்த நிலையில், தற்போது அந்த சீரியலை பின்னுக்கு தள்ளி சின்ன மருமகள் சீரியல் முன்னணிக்கு சென்றுள்ளது. விஜய் டிவியின் டி.ஆர்.பி ரேட்டிங்கில், சின்ன மருமகள் சீரியல், 9.3 டிஆர்பி புள்ளிகள் பெற்று  முதலிடத்தில் உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் 9.1 புள்ளிகள் பெற்று 2-வது இத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்து பாக்கியலட்சுமி சீரியல் 7.6 டிஆர்பி ரேட்டிங்கை பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.  மேலும் இதுவரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரத்தில் இருந்து 7 மணிக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதனால் சீரியலின் டி.ஆர்.பி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதே சமயம் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

அதேபோல் இதுவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த அய்யனார் துணை என்ற புதிய சீரியல் 8.30 மணிக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.8 டிஆர்பி புள்ளிகளை பெற்று 4-வது இடத்தையும், அய்யனார் துணை சீரியல் 5.4 டிஆர்பி ரேட்டிங் பெற்று 5-ம் இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக 9.30 மணி ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி 2 சீரியல் விஜய் டிவி டி.ஆர்.பியில் முதலிடத்தை பிடித்த நிலையில், தற்போது சின்ன மருமகள் சீரியல் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

Read Entire Article