ARTICLE AD BOX
/indian-express-tamil/media/media_files/2024/10/23/d9tCvgkWFdrzyVvAkNmQ.jpg)
ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், சோளத்தில் 'குளுட்டன்' இல்லாததால் இன்சுலின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/i6anae79KTgFkxokZAfB.jpg)
வெண்சோளம் என்கிற சிறு சோளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறுசோளம் ஒரு புரதம் நிறைந்த உணவாகும். குழந்தைகளுக்கு சிறு வயதில் அதிகமாக சளி பிடித்தல், இருமல், தும்மல், ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிறு சோளம் ஒரு நல்ல தீர்வை கொடுக்கும்.
/indian-express-tamil/media/media_files/eDsvk0EZEo6uHVoT8zaM.jpg)
இந்த சிறு சோளத்திலும் புரதச்சத்து முழுமையாக கிடைக்கும். இந்த சோளத்தை நேரடியாக சாப்பிடாமல் உணவு வகைகளுடன் சேர்த்து சாப்பிடலாம். சோள மாவு சேர்த்து தோசை சாப்பிடுவதால் எண்ணெய் சேர்க்காமல் தோசை மொறு மொறு என்று வரும் என்பதாலும் குழந்தைகளுக்கு அதிகம் பிடிக்கும்.
/indian-express-tamil/media/media_files/ik2qWVIS2Wylky3yZ4EN.jpg)
குழந்தைகள் நன்றாக சாப்பிடுவதற்கு சத்துமாவு பவுடர், சத்துமாவு கஞ்சி செய்து கொடுக்கலாம். சத்துமாவு செய்யும் அனைத்து பொருட்களுடனும் இந்த சிறு சோளத்தையும் சேர்த்து சாப்பிடலாம். இது மாதிரியான உணவுகள் சுவையாகவும் சத்தாகவும் இருக்கும்.
/indian-express-tamil/media/media_files/A260KJLT43uTivo6Vxn1.jpg)
அபரிமிதமான நார்ச்சத்து இதில் உள்ளதால், அஜீரணத்தை போக்கி, மலச்சிக்கலையும் தீர்க்கிறது.. இதனால், குடல் ஆரோக்கியம் பெறுகிறது.. மலச்சிக்கல் உள்ளவர்கள், சோளத்தை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்களின் அருமருந்து இந்த சோளம்.. சோளத்தை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடுகள் ஏற்படுவதில்லை.
/tamil-ie/media/media_files/uploads/2021/03/can-corn-759.jpg)
வெள்ளை சோளத்தில், நிறைய நார்ச்சத்து உள்ளதால், உடல் எடையை கட்டுக்குள் வைத்து, எடை அதிகம் ஏறிவிடாமல் பாதுகாக்கிறது.. நீரழிவு நோய் உள்ளவர்கள், கம்பு மாவுடன், சோளமாவையும் கலந்து களி போல செய்து சாப்பிடலாம்.. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதில் சோளம் முக்கிய பங்கு வகிகிறது. மூட்டு வலிகளுக்கும், எலும்பு தேய்மானங்களுக்கும், இந்த சோளம் தீர்வை தருகிறது. குறைந்த இரத்த அழுத்தத்தை சரிசெய்கின்றது. குறைந்த இரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது.