சொந்த குடும்பத்தினரே என்னை அப்யூஸ் பண்ணி.. கதறி அழுத கெமி.. வரலட்சுமி சொன்ன அதிர்ச்சி விஷயம்

5 hours ago
ARTICLE AD BOX

சொந்த குடும்பத்தினரே என்னை அப்யூஸ் பண்ணி.. கதறி அழுத கெமி.. வரலட்சுமி சொன்ன அதிர்ச்சி விஷயம்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் 3 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் போட்டியாளராக இருக்கும் கெமி தன்னுடைய சொந்த குடும்பத்தினரே தன்னை அப்யூஸ் செய்ததாக கதறி அழுதார். அதை தொடர்ந்து வரலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மோசமான சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் சொல்லி இருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் பெண்களுக்கு மட்டும் அல்லாமல் ஆண்களுக்கும் பாலியல் தொந்தரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரை பலரும் இந்த தொந்தரவுகளில் சிக்கி வேதனையில் இருக்கிறார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டும்தான் அதை தைரியமாக சொல்லி வருகிறார்கள்.

Sarathkumar rathika

கெமி சொன்ன தகவல்

அதிலும் நடிகைகள் பலர் தங்களுக்கு நடக்கும் அவலங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட கெமி சொன்ன தகவல் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. கேமி ஏற்கனவே பல சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பார்த்திருப்போம்.

குக் வித் கோமாளி பிரபலம்

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக கலந்து கொண்டு பலரையும் சிரிக்க வைத்தார். அதுபோல இப்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார். இவருடைய டான்ஸ் திறமையை பார்த்து ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள். இவருக்கு இப்படியும் ஒரு திறமை இருக்கிறதா? என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்த வார ரவுண்ட்

கடந்த வாரத்தில் கூட மணிமேகலையை தூக்கி சுத்தி பாடாய் படுத்து எடுத்திருந்தார். கட்டிப்புடி கட்டிபுடிடா பாடலுக்கு மணிமேகலையோடு கெமி போட்ட டான்ஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் ரெட்ரோ ரவுண்ட் நடைபெறுகிறது. இதில் கெமிக்கும் அவருடைய ஜோடி டான்ஸ் ஆடும் போட்டியாளரும் சேர்ந்து இளமை இதோ இதோ பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.

வீட்டுக்கு போன இடத்தில் ராதிகா செய்த செயல்.. சரத்குமாரின் பெருந்தன்மை.. டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் உருக்கம்
வீட்டுக்கு போன இடத்தில் ராதிகா செய்த செயல்.. சரத்குமாரின் பெருந்தன்மை.. டான்ஸ் ஜோடி டான்ஸ் பிரபலம் உருக்கம்

உடைந்து போன கெமி

பாடல் முடிந்ததும் கெமியிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கெமி இதுவரைக்கும் எல்லோரையும் சிரிக்க வச்சு, சிரிச்சி தான் பார்த்திருக்கிறோம். ஆனால் கேமி உடைந்து போன தருணங்கள் உண்டா என்று கேட்க, அதற்கு அது கண்டிப்பா உண்டு. எல்லோருக்கும் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான ஒரு விருப்பம் ஏற்படும் போது அவருடைய உறவினர்கள் தான் துணையாக இருப்பார்கள். ஆனால் எனக்கு அந்த கொடுப்பினை கிடைக்கவில்லை.

உறவினர்கள் செய்த செயல்

நான் என்னுடைய வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்னுடைய உறவுகள் என் அருகில் யாரும் உதவவில்லை. என்னுடைய உறவினர்களே என்னை அபியூஸ் செய்திருக்கிறார்கள், கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள் என்று கதறி அழுது கொண்டிருந்தார். அப்போது அதை பார்த்த வரலட்சுமி, ரவீனா உட்பட பலரும் அழுதிருந்தார்கள்.

வரலட்சுமி சொன்ன சம்பவம்

பிறகு வரலட்சுமி பேசுகையில் நீங்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பிங்க என்று எனக்குப் புரிந்து கொள்ள முடிகிறது. என்னுடைய அப்பாவும் அம்மாவும் வேலை வேலை என்று பிசியாக இருந்தாங்க. அதனால என்னை சொந்தக்காரங்க வீட்டில் விட்டு வளர்த்தாங்க. அப்படி சொந்தக்காரங்க வீட்டில் இருக்கும்போது ஐந்து ஆறு பேர் என்னை அபியூஸ் செய்திருக்கிறார்கள்.

வரலட்சுமியின் வேண்டுகோள்

என்னுடைய மார்பகத்தில் கைகளை வைத்து... என சொல்லிக் கொண்டிருக்கும்போதே வரலட்சுமி கதறி அழுது இருக்கிறார். பிறகு நான் எல்லா பெற்றோர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்களுடைய குழந்தைகளுக்கு சின்ன வயசிலேயே குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுங்க என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார். இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
English summary
Dance Jodi Dance Promo: The Promo for today's episode has been released on Vijay TV. In it, Kemi, who is a rival, cried out that his own family had upset himself. Following this, Varalakshmi has shocked the worst incident in her life.
Read Entire Article