கிண்டியில் கூட்டம்... பனையூரிலும் சாலிகிராமத்திலும் கருப்புக் கொடி போராட்டம்?

1 day ago
ARTICLE AD BOX

சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில்  தென்னிந்திய மற்றும் பஞ்சாப் மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரும் வேளையில் பாஜக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. பனையூரில் அண்ணாமலையும் சாலிகிராமத்தில் தமிழிசை சவுந்திரராஜனும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

போலீசாரின் முன் அனுமதி பெற்றார்களா? அல்லது விளம்பரம் கொடுக்க வேண்டாம் என்று கைது நடவடிக்கையை போலீசார் எடுக்கவில்லையா என்று தெரியவில்லை. ஆனால் கூட்டம் ஒரு பக்கம் நடக்க, எங்கோ ஒரு மூலையில் கூட்டத்தில் பங்கேற்க வந்த தலைவர்களுக்கு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறுவது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே இது தான் முதல் முறை என்று தெரிகிறது.

தமிழிசை சவுந்தர ராஜன் ஒரு கையில் பாஜக கொடியையும் மற்றொரு கையில் கருப்புக் கொடியையும் ஏந்தியபடி வித்தியாசமான முறையில் எதிர்ப்பு தெரிவித்தார்.

Read Entire Article