ARTICLE AD BOX
செய்தியாளர்: ஆர்.ரவி
சேலம் அருகே ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த கடலூர் மாவட்டம் வேப்பூரைச் சேர்ந்த முத்துராஜ் (68) என்ற முதியவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முதியவர் முத்துராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.